சவுதியில் இந்திய பணிப் பெண்ணின் கை வெட்டப்பட்டதா ? நடந்தது என்ன?

6235be28-e14d-41dd-bb7b-3eaed9a037f5_S_secvpf

சவுதியில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியா இந்து பெண் கை வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

முதலாளியின் சித்திரவதை தாங்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சேலையை கட்டி தப்பிக்க முயன்ற போது முதலாளி பார்த்து விட்டு அந்த பெண்ணின் கையை வெட்டியுள்ளார் என்று இந்தியாவில் இந்துத்துவா தலைவர்கள் சவுதிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் சவுதியிலிருந் வெளிவரும் நாளிதழில் அதற்கு மாற்றமான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2 ந்தேதி சவூதிக்கு பணிப்பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அந்த வீட்டில் இருந்தவர் 70 வயதான சவூதி மூதாட்டி மட்டுமே.வீட்டுக்கதவின் உள்புறம் சாவி எப்போதுமே இருக்கும். யார் வேண்டுமானாலும் வீட்டை விட்டு செல்ல முடியும். வெளிலிருந்து வந்தால் உள்ளே இருப்பவர் திறந்துவிட்டாக வேண்டும்.

இந்நிலையில், சவூதி மூதாட்டிக்கு தெரியாமல்…சேலையை கயிறாக கட்டி அதைப்பிடித்து தொங்கியவாறு இரண்டாம் மாடியிலிருந்து தன்னுடைய உள்பக்கம் பூட்டப்பட்ட அறையின் ஜன்னல் வழியே சறுக்கியுள்ளார். அப்போது திடிரேன பிடி நழுவி கீழே எசகு பிசாக ட்ரான்ஸ்ஃபர்மர்க்கு இடையே விழுந்ததில் கை கட்டாகியுள்ளது.
அப்போது…

அங்கே சாலை துப்புரவு பணியில் இருந்த பெங்காளிகள் ஓடிவந்து அவரின் வீட்டுக்கு சென்று தகவல் சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சவூதி மூதாட்டி தன் மகனுக்கு ஃபோன்போட அண்டைவீட்டார்களும் உதவிக்கு வர உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்ப மகனும் வந்து சேர… ஆக்சிடென்ட் கேஸ் என்பதால் போலிசுக்கும் சவூதி தகவல் சொல்லிவிட்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்.

எனினும், என்ன காரணத்துக்காக கஸ்தூரி தன் அறையை உள்பக்கம் பூட்டிவிட்டு சேலையை கட்டி ஜன்னல் வழியே இறங்கினார் என்பது தெரியவில்லை.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.