வந்துவிட்டது மைக்ரோசாப்ட்டின் முதல் லேப்டாப்

microsoft-surface-rt2

மைக்ரோசாப்ட் கணினி உலகில் ஜாம்பவானாக இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பீ வை தவிர அனைத்து தயாரிப்புகளும் ஒரளவு தான் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெறவில்லை.  தற்போது வெளிவந்திருக்கும் விண்டோஸ் 10 ஆனது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் மைக்ரோசாப்ட்டின் கவனம் ஸ்மார்ட் போன் பக்கம் சென்றது. அதில் விண்டோஸ் 10 யை நிறுவி ஒரளவு ஸ்மார்ட் போன் சந்தையில் இடத்தைபிடித்தது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஆப்பிள் மேக் லேப்டாப் போல மைக்ரோசாப்ட்டின் லேப்டாப்பும் வெளி வந்திருக்கின்றது. இதில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 யைப் பதிந்து வெளிவிட்டிருக்கின்றது.  இதுவே மைக்ரோசாப்டின் முதல் லேப்டாப் ஆகும்.

மைக்ரோசாப்ட்டின் தலைமையாளராக இந்தியர் நாதெள்ளா ஆனவுடன் நிறைய சேவைகளை மைக்ரோசாப்டில் வெளிக்கொண்டுள்ளார். அதில் லேப்டாப் வெளிவிடுவதும் அவர் திட்டம் தான்.  புதிதாக வெளிவந்துள்ள இந்த லேப்டாப்பின் பெயர் சர்பேஸ் புக்.  இதன் எடை வெறும் 700 கிராம் மட்டுமே 13 ” HD  டிஸ்பிலேவாக உள்ளது. இதனால் தெளிவான உயர்தர தொழில்நுட்பத்தில் விடியோக்களை பார்க்கலாம். மேலும் தொடு திரை வசதிகளுடன் வந்துள்ளது.

மைக்ரோசாப்ட் ஆனது சாப்ட்வேர், மொபைல், ஸ்மார்ட்போன் என அனைத்திலும் போட்டியிட்டு தனக்கென  தனியிடத்தை பெற்றுவிட்டது.  இப்போது அதுபோல் சொந்தமாக கணினி தயாரிப்பிலும் வெற்றிபெற்றுவிடும் என்பதில் அச்சமில்லை.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.