எந்திர மனிதனுக்கு திருமணமா?

robo wedding3

உலகில் ஆண், பெண் திருமணம் நடந்திருக்கின்றது.  அதேபோல் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.  ஏன் ஆணுக்கும் ஆணுக்கும் கூட சமீபத்தில் சத்தம்போடாமல் திருமணம் ஆகின்றது.

ஆனால் இது வித்தியாசமானது மனிதன் தயாரித்த இரண்டு ரோபோ என்ற எந்திர மனிதர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தருக்கின்றனர் ஜப்பானியர்கள்.  டோக்கியோவில் மாவோ டங்கி என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பரோவிஸ் மற்றும் யுக்ரின் என்ற இரண்டு ரோபோக்களுக்கு இடையே திருமணம் நடந்தது. இதில் திருமணத்தில் கலந்து கொண்ட பார்வையாளர்களாக ரோபோக்களே இருந்தனர்.

இதில் பரோவிஸ் என்ற ரோபோதான் ஆண் ரோபோ அதற்கு மாப்பிள்ளைபோல் உடல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் பெண்ரோபோ யுக்ரினுக்கு தேவதைபோல் உடையணிந்து அலங்காரம் செய்யப்பட்டது. திருமணத்தில் ஆடல் பாடல் என அனைத்தும் ரோபோக்களே செய்தனர்.

தங்களது நிறுவன விளம்பரத்திற்காக புதுமையாக இந்த முறையைக் கையாண்டதாக தொிவித்துள்ளனர்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.