தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

TamilDailyNews_3261333703995

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  தொடர்ந்த நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டருக்கின்றது .  இதன் காரணம் என்னவென்றால் நாட்டில் எல்லா இடங்களிலும் சுங்க வரிச் சாவடி வைத்து நெடுஞ்சாலைகளின் ஒப்பந்தக் கம்பெனிகள் வரி வசூல் செய்துவிடுகின்றார்கள். இதனை எதிர்த்து நடக்கின்றது இந்த வேலை நிறுத்தம்.

இந்த வேலை நிறுத்தத்தால் அதிகமாக லாரி உரிமையாளர்கள் 6 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறுகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர். நாங்கள் வரிச்செலுத்தவே மாட்டோம் என்று கூறவில்லை அதே சமயம் கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை கட்டிவிடுகின்றோம் எல்லா இடத்திலும் கட்ட இயலவில்லை. என்று கூறுகின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தைப்பற்றி தலைவர் பீம் வத்வா கூறுகையில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் நாங்கள் ஒயாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.  இப்போதே வேலை நிறுத்தத்தில் ஆங்காங்கே ஈடுபட்ட டிரைவர்கள் தங்களது லாரிகளை நிறுத்திவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.