மூடநம்பிக்கையால் சிறுவன் நரபலி

images (8)

 

நாட்டில் நிறைய மூடநம்பிக்கைகள் கடவுள் எனும் பெயரால் பின்பற்றப்படுகின்றது அதில் ஆட்டைப்பலி கொடுத்தார்கள் மாட்டைப் பலி கொடுத்தார்கள் அதெல்லாம் பொறுத்தோம். ஆனால் இப்போது மிகக் கொடூரமாக குழந்தைகளையும் மனிதர்களையும் நரபலி எனும் பெயரால் கொன்று வருகின்றார்கள்.

ஆந்திராவின் பகுரு கிராமத்தில் நான்கு வயதடைந்த சிறுவனை தூக்கி நரபலி கொடுத்திருக்கின்றான். உண்மையறிந்த பொதுமக்கள் அவனை தாக்கி காவல் நிலையத்துடன் ஒப்படைத்துள்ளனர்.

கொடூரமாக கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த கொடூர வேலையை திருமல ராவ் என்ற மாந்தீரிகம் செய்கின்றேன் என்ற பேர்வழி செய்துள்ளான். அக்கிராமத்தல் குழந்தைகள் காப்பகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது குழந்தைகளை விட்டுச்செல்வார்கள் அவ்வாறு விட்டுச் சென்ற சிறுவனை மந்திரவாதி அழைத்துச்சென்றுள்ளான்

பின்னர் அச்சிறுவனை பலியிட்டு இரத்தத்தை வீடு முழுக்கவும் வீட்டை சுற்றியும் தெளித்து இருக்கின்றான். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளான். அக்குழந்தையின் தாய் வந்து காப்பகத்தில் பிள்ளையை தேடியபோது அவனைக்காணவில்லை. பின்னர்தான் தாய்க்கு அவன் தூக்கிக்கொண்டு போனது தெரியவந்தது. பொதுமக்கள் அவனைத்தேடி விட்டிற்கு வந்திருக்கின்றனர்.  குழந்தையின் உடல் மட்டும் தான் இருந்திருக்கின்றது.

பின்னர் மந்திரவாதியை தேடிப்பிடித்து நன்றாக பொதுமக்களின் வஞ்சம் தீர்த்துவிட்டு பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  ஒரு குழந்தையை காப்பகத்தில் இருந்து எடுத்து நரபலி கொடுத்தது அந்தப்பகுதியில் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.