தண்ணீருக்காக பானைக்குள் தலைவிட்டு மாட்டிக்கொண்ட சிறுத்தை!

ஆண்பாவம் படத்தில், தவக்களை தலையில் பாண்டியராஜன் தவளைப் பானையை கவிழ்த்துவிட்டு எடுக்கமுடியாமல் தவிப்பார். அதுபோல ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊரில் சிறுத்தைகள் கூடத்தில் உள்ள சிறுத்தைப்புலி ஒன்று தண்ணீரை தேடி பானைக்குள் தலையை விட்டு, மாட்டிக் கொண்டது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பகுதிகளில் கடும் வறச்சி நிலவிவருகின்றன. அதனால் குடிநீர் தட்டுப்பாடு மனிதர்களுக்கு ஏற்பட்டுவருகின்றது. அதேபோல் மிருகத்திற்கும் நடந்து விட்டது பாவம் மிருகங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்துவருகின்றன. அப்படி தண்ணீர் தேடி ஒரு சிறுத்தை விட்டுப்பகுதிக்கு வந்து குண்டானில் தலையை விட்டு மாட்டிக்கொண்டது.
பின் தலையை வெளியே எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்து பீதியைக் கொடுத்தது. இதனால் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தையை பிடித்து மயக்க ஊசியைப்போட்டு பிடித்து விடுவித்தனர். இந்தியாவில் புலிகளை விட சிறுத்தைகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டு இருக்கின்றது. வறட்சியால் அவ்வப்போது புலிகள் மற்றும் சிறுத்தைகள் வெளியே வந்து கிராமத்தில் நுழைந்து, ஆடு மாடு சிலநேரங்களில் மனிதனையும் அடித்து விடுகின்றது.