பென்னகரத்தில் சோகம் ஐந்து சிறுமியர்கள் பலி.

Tamil_News_large_135515420151002073624

காலாண்டு விடுமுறைத்தினத்தில் குளத்துக்கு குளித்துவிளையாடச் சென்ற ஐந்து பிள்ளைகள் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்துவிட்டனர். தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரத்தின் அருகில் உள்ள சின்னபூம்பள்ளம் என்ற ஊரைச்சேர்ந்த ஐந்து சிறுமிகள் அக்கிராமத்தின் குட்டையில் பரிதாபமாக இறந்துப்போயினர்.

விடுமுறை தினத்தில் தோழிகளோடு இணைந்து அனைவரும் குளத்தில் குளிக்கச்சென்றனர். அவர்களின் ராஜேஸ்வரி என்ற சிறுமி குளிப்பதற்காக குட்டையில் இறங்கினார்.  அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் மூழ்க ஆரம்பித்தார். இதைப்பார்த்துக் கொண்ட சிறுமி புவனேஷ்வரி நீரில் இறங்கி காப்பாற்ற முயன்றார் இதில் அவரும் மூழ்கினார். இதைப்பார்த்த மற்ற சிறுமிகளும் தண்ணீரில் இறங்கி கூச்சல் போட்டுக்கொண்டே காப்பாற்ற முயன்றனர். அவர்களில் 3 பேர் சேற்றில் மாட்டி இறந்து போயினர்.  கத்திய சத்தத்தை கேட்டு அந்தப்பக்கம் வந்து முருகன் என்ற கிராமவாசி சிக்கிய பிள்ளைகளில் நான்கு பேரை காப்பாற்றினார்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நிலையைக்கண்டு கதறி அழுதனர். பிள்ளைகளின் சடலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஐந்து பிள்ளைகளும் இறந்து சம்பவம் அந்த ஊரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.