வி.எல்.சி மீடியா பிளேயர் தெரிந்ததும் தெரியாததும்

vlc media player low quality images_Prathangirs

வி.எல்.சி. இயக்கியானது காணொளி மற்றும் ஒலிக் கோப்புகளை இயக்கக் கூடிய இலவச மென்பொருள். இந்த மென்பொருளை இலகுவாகவும், எளிதாகவும் கையாள முடியும். அத்துடன் வி.எல்.சி. ஊடக இயக்கியானது சக்தி வாய்ந்ததும், அதி வேகமாகவும் கோப்புக்களை இயக்கும் மேலும் கோப்புக்கள், வட்டுக்கள், வலைப்புகைப்படக் கருவிகள், இணையத்தில் உள்ள காணொளிகள் என்பனவற்றையும் திறக்கக் கூடியது.

முற்றிலும் இலவசமானதும் கட்டற்றதுமான வி.எல்.சி. ஊடக இயக்கி விளம்பரங்கள் அற்ற மென்பொருளாகும். தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது.

சிறப்பம்சங்கள்:
எளிய சக்தி வாய்ந்த மற்றும் வேகமாக செயல்படக்கூடியது அனைத்து விதமான கோப்புகள், டிஸ்க்குகளான டிவிடி, ப்ளூ-ரே, விசிடி, ஆடியோ டிஸ்குகள் குறுவட்டுகள், வெப்கேம்கள் மற்றும் பிரவாக வீடியோக்களை (ONLINE STREAMING AND BUFFER VIDEOS) இயக்கக்கூடிய மென்பொருள்.

CODECS ஏதும் இன்ஸ்டால் செய்யாமல் இருக்கும் அநேக CODECSகளை வைத்தே தங்குத் தடையின்றி இயங்கக்கூடியது. (MPEG-2, H.264, DIVX, MPEG-4, WEBM, WMV)

முற்றிலும் இலவச, ஸ்பைவேரற்ற, விளம்பரங்களற்ற மற்றும் பயனர் கண்காணிப்பற்ற பாதுகாப்பான மென்பொருள்.

பெரும்பாலான இயக்கு தளங்களில் இயங்கக்கூடியது:
விண்டோஸ், லினக்ஸ், மேக் OSX, யுனிக்ஸ்.

மீடியா மாற்றி (CONVERTER) மற்றும் பிரவாக (STREAMING) மாற்றி.

ஆன்லைனில் ரேடியோ கேட்க:
VIEW->PLAYLIST >MEDIA BROWSER>INTERNET TABனை கிளிக் செய்யுங்கள்
இதன் கீழ் வரும் அனைத்தும் ரேடியோ POD ஸ்டேஷன்களாகும், நீங்கள் கிளிக் செய்த 10 நொடிகளில் லோட் ஆகிவிடும் பின்னர் நீங்கள் வலதுபுறம் உள்ள ஸ்க்ரீனில் உங்களுக்கான ஸ்டேஷனை தேர்வு செய்து தங்கு தடையின்றி VLC யில் தெளிவாய் கேளுங்கள்.

AUDIO TO VIDEO அல்லது VIDEO TO AUDIOவாக கன்வர்ட் செய்ய:
MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற கோப்புகளை VLC கன்வர்ட் செய்ய அனுமதி அளிக்கின்றது. அதனை செயல்முறைப்படுத்துவதற்கான வழிமுறையை காண்போம்:

VLC MEDIA PLAYER ஓபன் செய்துக்கொள்ளுங்கள்
MEDIA>CONVERT/SAVE
கன்வர்ட் செய்ய வேண்டிய கோப்புகளை ADD செய்துகொள்ளுங்கள்.
CONVERT/SAVE பட்டனை கிளிக் செய்யுங்கள்.
DESTINATIONனில் எங்கே SAVE செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.
PROFILலில் என்ன கோப்பாக கன்வேர்ட் ஆக வேண்டும் என்பதையும் தெரிவு செய்யுங்கள். பின்னர் START பட்டனை பிரஸ் செய்யுங்கள் இப்போது நீங்கள் கொடுத்த கோப்பு பார்மேட்டில் சேவ் ஆகிவிடும்.

யூ.டியுப் போன்ற வலைதளங்களில்
உள்ள வீடியோக்களை காண மற்றும் பதிவிறக்கம் செய்ய:

முதலில் நீங்கள் காண விரும்பும் யூ.டியுப் லின்கினை காப்பி செய்து கொள்ளுங்கள். MEDIA>OPEN NETWORK STREAM சென்று
நீங்கள் காப்பி செய்த லிங்கை இங்கே பேஸ்ட் செய்து PLAY செய்யுங்கள்.
(இதனையும் நீங்கள் கன்வர்ட் செய்துக்கொள்ளலாம், அதற்கு PLAY பட்டன் அருகின் இருக்கும் கீழ்நோக்கிய▼ பட்டனை கிளிக் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைப்படி தொடருங்கள்)

நீங்கள் PLAY பட்டனை கிளிக் செய்தவுடன் அந்த லிங்கில் உள்ள வீடியோ வி.எல்.சியில் PLAY ஆகும். இப்பொழுது TOOL>CODEC INFORMATION சென்றால் கீழே LOCATION BOX இருக்கும் அதில் நீங்கள் காப்பி செய்த லின்கினை மறுபடியும் இதில் பேஸ்ட் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் காண நினைக்கும் வீடியோவானது ப்ரௌசரில் இருந்து உங்கள் ஹார்ட் டிஸ்கில் சேவ்வாக தொடங்கிவிடும்.


 

பதிவிறக்கம் செய்ய: CLICK HERE

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.