இனிமேல் யானை வளர்க்கக்கூடாது!

01c69e15-eb0c-41fd-8738-6fba6a868a21_S_secvpf

கோயில் மற்றும் பெரிய வீடுகளில் யானைகளை வளர்த்துவருகின்றனர்.  நம் கேரளமாநிலத்தில் அதிகமாக யானைகளை வளர்க்கின்றனர். நம் தமிழகத்தில் யானைகளை கோயில்களில் உற்சவத்தின் போது பயன்படுத்திவிட்டு பின் யானைப்பாகன் மூலம் பராமரிப்பர். பொதுவாக வளர்க்கப்படும் யானைகள் கட்டியே இருக்கும்.  மேலும் அதற்கு உணவுகள் நாம் தான் கொடுக்கவேண்டும் அவைகள் தேட அனுமதிப்பதில்லை.

யானைப்பாகன்கள் திருவிழாக்காலம் தவிர மற்ற காலங்களில் யானையைக் கூட்டிக்கொண்டு தெருவில் பிச்சையெடுக்க வைக்கின்றனர். பின் அவைகளுக்கு சரியான சாப்பாடு போடாமல் தட்டிக்கழித்துவிடுகின்றனர். இதனால் யானைகள் உடலளவில் துன்பப்படுவது மட்டுமின்றி மதமும் பிடித்து அனைவரையும் காயப்படுத்துகின்றது.

யானை மிகவும் பலம் வாய்ந்த விலங்கு.  ஒரு சராசரியான யானை 70 வருடங்கள் வாழும். ஆனால் வீட்டில் அல்லது கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் உடல் நலம் சரியில்லாமல் சிறு வயதிலேயே இறந்துவிடுகின்றன ஒரு குட்டியானை தன் தாயிடம் குறைந்தது 8 வருடங்களாவது பால் குடித்து வளரும்.  ஆனால் குட்டியிலேயே யானையை பிடித்து வந்து பயிற்சி கொடுத்து அதிக சுமை கொடுக்கின்றனர்.  இதனால் யானை மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றது.

நம் உலகில் உள்ள பெரிய பிராணி இதுதான் விலங்கு. கண்ணுக்கு முன்னாடி அந்தப்பெரிய விலங்கு அழிவதை காணமுடியாத திரு. சரவணன் என்பவர் மதுரைக்கோர்ட்டில் மேற்கண்டவாறு தனது வாதத்தை சமர்ப்பத்துள்ளார். அக்டோபரில் வழக்குக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர் கோயில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்படும் யானைகளை திரும்பப்பெற்று காடுகளில் விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஆனால் இவ்வளவு நாளாக தானாக தீனி தேடாத யானைகள் எப்படி இனிமேல் தானாக தீனி தேடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.