கண்களைப் பாதுகாக்க முருங்கை

Drumstick

முருங்கைக்காயை அனைவருக்கும் அறிந்தது தான். அதில் வைக்கும் சாம்பாரை வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் அவ்வளவு ருசியானதாக இருக்கும் அதே சமயம் உடலுக்கும் மிகுந்த சக்தியைக் கொடுக்கக்கூடியது.

இந்த முருங்கை மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை உடையது தான் அவற்றைப்பற்றி நாம் பார்ப்போம்.

முருங்கைக்காய்

சக்தி நிறைந்த இதன் காய்கள் மற்றும் விதைகள் மனித உடலுக்கு இன்றியமையாதது.  முருங்கை சாப்பிட்ட உடனே நமக்கு தெம்பு ஏறியது தெரியும். வீரியத்திற்கு உதவி செய்வதில் முருங்கைக்காய்க்கு நிகர் எதுவுமில்லை. இரும்பு கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் முருங்கைக்காயில் கிடைக்கின்றன.

முருங்கை கீரை

முருங்கை கீரை நன்றாக இருக்கும் தினமும் அதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் வெப்பம் குறைந்து இரும்பு சத்து அதிகரிக்கின்றது.  அதைக்கொண்டு நாம் அதிகமாக இரும்புச்சத்தினைப்  பெறலாம்.

முருங்கை பூ

முருங்கைப்பூவானது மிக நல்ல குணங்கள் நிறைந்தது.  கண்களுக்கு ஏற்றது.  முருங்கைக்கீரையைக் கிண்டும் போதே இறுதியாக பூக்களையும் சேர்த்து வணக்கி சாப்பிடலாம். இல்லையேல் முருங்கைப் பூவை காயவைத்து பொடியாக மாற்றிவிட்டு பின் சாப்பிடலாம். கண்களில் ஏற்படும் புரை மற்றும் கண் மங்கல், கண் எரிச்சல் ஆகிய எல்லா கண் நோய்களும் தீர்ந்துவிடும்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிகக்கவும் அவற்றின் ஞாபக மறதி பிரச்சினைகளை சரி செய்யவும் இந்தப்பூக்களை வாங்கி சாப்பிட குணமாகும்.

முருங்கைப்பூக்கள் மருத்துவத்தை தாண்டி மனப்பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கக் கூடியது.   மனதில் ஏற்படும் உளைச்சல், பயம், தாழ்வு மனப்பான்மை, குற்றஉணர்வுகள் மற்றும் கோபஉணர்வுகளுக்கு  மருத்துவம்  பலன் தராது. ஆனால் மனதில் இந்த விசயங்களை கலைந்து மன அமைதி ஏற்பட வைத்தால் மன உளைச்சல் நீங்கிவிடும்.  முருங்கைப் பூ பொடியை நன்றாக அரைத்து பாலில் போட்டு குடித்துவிடுங்கள் உங்களுக்கு சற்று மயக்கம் வருவது போன்று வரும். பின் உறங்கி எழுங்கள்.   பாரம் குறைந்தது போல எண்ணி விடுவீர்கள்.

பித்தம் நீங்க முருங்கைப்பூக்களை காலை மாலை இருவேளையும் பொடி செய்து சாப்பிடவேண்டும்.

தம்பதிகளின் பிரச்சினைகளுக்கு முக்கியமாக முருங்கைப்பூப்பொடி கலந்த பாலை மாலை வேளைகளில் உண்ணவேண்டும்.

இவ்வாறு தினமும் எப்படியாவது முருங்கையை நம் உடலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.