உடல் சூட்டை தணிக்க எளிதான வழி!

body heat

உடலின் வெப்பநிலை மிக முக்கியமான ஒன்று ஒரே அடியாக வெப்பம் உயர்ந்து விடவும் கூடாது அதே சமயம் வெப்பம் குறைந்துவிடவும் கூடாது. மனிதனுக்கான 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எப்போதும் இருக்க வேண்டும்.

உடலில் வெப்பநிலை குறைந்தால் சளிபிடிக்கும், காய்ச்சல் வரும் ஆனால் வெப்பநிலை உயர்ந்தால் உடலில் கொப்புளங்கள் தோன்றும் மற்றும் புண்கள் வந்து தொந்தரவு செய்து விடும். பெரிய பிரச்சினை தலை முடி உதிர்ந்து கொட்டிவிடும்.

இவ்வாறு வெப்பநிலை உயர்ந்தவர்கள் அடிவயிற்றில் கைவைத்தால் மிக சூடாக இருக்கும். அவர்களை குளுமை படுத்த இந்த கைகண்ட முறையைப் பயன்படுத்தவும்.

தேவையானவை

1. நள்ளெண்ணெய்.

2.பூண்டு.

3.மிளகு.

செய்முறை

நள்ளெண்ணெயை அடுப்பில் கிண்ணத்தை வைத்து அதில் ஊற்றியப்பின்பு பூண்டுப்பல்லை எடுத்து அதில் போட்டு பின் மிளகையும் அதில் போட்டு மிதமான சூட்டில் விட்டு. பின் இறக்கி வைக்கவும். சூடு ஆறியப்பின்பு அவற்றை கால் மற்றும் கைப்பெருவிரல்களில் பூசி 5 நிமிடத்திற்கு பிறகு காலைக்கழுவிக்கொள்ள வேண்டும்.   ஜலதோசம் பிடித்தவர்கள் மற்றும் காய்ச்சல் வந்தவர்கள் இதனை செய்ய வேண்டாம்.

வெப்பம் குறைந்தாலே மற்றப்பிரச்சினைகள் சேர்ந்துவிடும்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.