அல்சரா தென்னமரத்தில ஏறி தேங்காய் பறிங்க

Anterior view of coronal section of the stomach

Original Exit Writer image is 116114 added peptic ulcer

நம் எல்லோரும் ஒரு கட்டத்தில் இந்த அல்சர் என்ற வயிற்றுப்புண் நோயை சந்தித்து விட்டு தான் வருகின்றோம். பொதுவாக மனிதர்களாகிய நாம் குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்ணவேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மிகுந்த வேலையின் காரணமாகவும் வறுமையின் காரணமாகவும் நமக்கு சரியான சாப்பாடு வேளை வேளைக்கு கிடைப்பதில்லை இதனால் நிறைய பேருக்கு வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் நோய் தாக்குகின்றது.

எதனால் வருகின்றது

பொதுவாக நாம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து விட்டு எழுந்துவிடுகின்றோம். நாம் அரக்க பரக்க சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டாலும் வயிறு நிதானமாகத்தான் செரிக்க ஆரம்பிக்கின்றது. வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் என்ற HCL  ஆசிட்டை சுரக்கும். இது உணவுகளை சிதைக்கப்பயன்படுகின்றது.  இந்த அமிலம் வயிற்றில் சுரக்கும்போது உணவுகள் இருந்தால் உணவுடன் சேர்ந்து வினைபுரிந்து விடும்.  அப்போது உணவுகள் இல்லாமல் இருந்தால் இரப்பையில் இந்த ஆசிட் இறங்கி புண்களை உருவாக்கி விடுகின்றன. இதனால் வயிற்றுவலி ஏற்படுகின்றன. ஒருமுறை அல்சர் தாக்கிவிட்டால் மற்றொரு முறை எளிதாக வந்துவிடும்.

அறிகுறிகள்

1. முதலில் வயிற்றில் வலி ஏற்படும்.

2. சிறிது காரம் சாப்பிட்டாலும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

3. உதட்டின் உட்பகுதியில் சிறிய புண்கள் ஏற்படும்.  இவ்வாறு புண் வந்தாலே அல்சர் தாக்கிவிட்டது என்று அர்த்தம்.

4. பசிக்காது.

5. துர்நாற்றம் வாயில் வீச ஆரம்பிக்கும்.

நிவாரணிகள்

1. சாப்பாடு நேரத்தில் சாப்பிட முடியவில்லையென்றால் பரவாயில்லை ஆனால் தண்ணீரையாவது மொண்டு குடிக்கவேண்டும். அது HCL ஆசிட்டின் வீரியத்தை டயலுடு ஆக்கிவிடும்.

2. அல்சர் வந்தது தெரிந்த உடன் ஒரு வாரத்திற்கு உப்பு, காரம், கத்திரக்காய், மற்றும் புண்களை கெதிக்க வைக்கும் உணவுகள் கிடையாது.

3. தேநீர் கூட சூடாக அருந்தக்கூடாது.

4. இரண்டு தேங்காயை தண்ணீருடன் முழுமையாக திருவி மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும். அந்தப்பாலை வடித்து அப்படியே குடிக்கவும்.  சக்கையை வாயில் போட்டு குதப்பவும். பின் மெதுவாக உதட்டின் புண்களில் படும்படி தேங்காயை வைக்கவும்.

5. இதே போல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவும். அல்சர் மறைந்துவிடும். உதட்டில் புண்களும் மறையும். ஆனால் இனிமேல் ஜாக்கிரதை கண்டிப்பாக வேளை வேளைக்கு தண்ணீரையாவது குடிக்க வேண்டும்.  ஒரு தடவை வந்துவிட்டால் எளிதில் மற்றொரு தடவை வந்துவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.