மூலிகைக் குடிநீர்

images (7)
பொதுவாக நமது சாதரணக்குடிநீரில் அதிக அளவு கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் கெடுதல் தரக்கூடியவைகள் காலரா சீதபேதி மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இதனால் தான் வருகின்றன. எல்லோராலும் வீட்டில் மினரல் வாட்டர் வாங்கி வைக்க முடியாது.  அதனால் இந்த மூலிகை குடிநீரை நான் பரிந்துரைக்கின்றேன்.
சீரகத்தினை நன்றாக சுடுநீரில் நுனுக்கிப்போட்டு கொதிக்க வைத்தால் தயாராகிவிடும். அதை எடுத்து பானையில் உள்ள நீரிலோ அல்லது குடத்திலோ கலந்து குடித்துவந்தால் சாதாக்குடிநீர்கூட சக்திவாய்ந்த குடிநீராகிவிடுகின்றது.
அதனுடன் ஆவாரம்பூ, ஆடாதொடை இலைகள், துளசி போன்ற மூலிகைகளை சேர்த்து காயவைத்த கலந்து கொண்டால் எந்த நோயும் நம்மைத்தாக்காது. சக்தி வாய்ந்த நீராகும்.
கீழே சில மூலிகை குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவாரம்பூ குடிநீர்
தங்கநிறப்பூக்களை உடைய தாவரம் உண்மையிலேயே தங்கச்சத்தை புவியில் இருந்து எடுத்துக்கொண்டுதான் வளருகின்றன.  இதன் பூக்களைப்பறித்துக்கொண்டு அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்கவும். மேனிக்கு தங்க நிறத்தை தருகின்றது.
துளசி குடிநீர்
துளசி குடிநீர் என்றதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்  பெருமாள் கோவில்களில் தீர்த்தம் தருவார்களே அதில் துளசி கலந்திருக்கும்.  துளசியைப்பறித்து அதை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்துபின் வடிகட்டி குடியுங்கள் சளி, ஜலதோசம், குளிர்காலத்திற்கு ஏற்றது.
வல்லாரைக்குடிநீர்
பொதுவாக இந்தக்குடிநீரானது மூளைக்குச் சக்தியைக் கொடுக்க கூடிய ஒன்று மிகவும் சக்திவாய்ந்தது. ஞாபக சக்தியைக் கொடுக்கக் கூடியது.  மேலும் தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவற்றிற்கு ரொம்ப முக்கியமானது.
கரிசாலாங்கண்ணி குடிநீர்
கரிசாலைப்பொடி அல்லது வெள்ளைக் கரிசலாங்கண்ணி தழைகளை எடுத்து மேற்சொன்னவாறு குடிநீரோடு குடித்துவரவும். முடிப்பிரச்சினைகள் மற்றும் உடலுக்கு தேவையான நீர்ப்பிரச்சினைகளை சரிசெய்துவிடும்.  இரும்புச்சத்துக்குறைபாட்டினை நீக்கிவடும்.
இரத்தச்சோகையை போக்கிவிடுகின்றது.
இவ்வாறு மேற்சொன்ன மூலிகைக் குடிநீரை தொடர்ந்து அருந்திவந்தால் உடல்நலம் மேம்படும்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.