மாவிலங்கம் சிறுநீர்பிரச்சினைக்கும் முகவாதத்திற்கும் விருட்சம்.

நவக்ரஹ+தோஷம்+நீக்கும்+மகத்துவ+எண்ணை!
மாவிலங்கம் பொதுவாக நீர்நிலைகள் இருக்கும் இடங்களில் வளரக்கூடிய மரமாகும் வெள்ளைப்பூக்களை உடைய மரமாகும். இதன் இலைகள் மற்றும் பட்டைகள் மருத்துவக்குணங்களை உடையது.
மாவிலங்க இலைகளை பறித்து அவைகளை கசக்கி சிறிது நெய் அல்லது வினிகர் சேர்த்து பருகினால் உடனே காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவை குணமாகும். அதே சமயம் வயிற்று எரிச்சல் இருந்தால் அதையும் போக்கக்கூடிய தன்மை இதற்கு இருக்கின்றது.
குளிர்காலம் மற்றும் காற்றடிக்காலத்தில் இரவில் சென்றால் காதுகளைகட்டிக் கொண்டு அல்லது காதை மூடிக் கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு செல்லவில்லை யெனில் குளிர் பட்டு முகத்தில் உள்ள சதைகள் இறுகி முகத்தின் தோற்றத்தை மாற்றிவிடும். அவ்வாறு  முகவாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே கீழ்க்கண்டவற்றை செய்து பார்க்கவும்.
மாவிலங்கு மரப்பட்டை ,மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்’ சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.
இந்த தாவரத்தின் இலைகளை சாறுபிழிந்து குடித்து வந்தால் சிறுநீரப்பிரச்சினைகள் உடனே போய்விடும். கல் கரைந்து வெளியேறி விடும். வீக்கம் வற்றிவிடும். சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.