வாழைத்தண்டு – மாதுளை சாலட்

download (7)

தேவையானவை:

வாழைத்தண்டு – 1 துண்டு
மாதுளம் முத்துகள் – 1 கப்
சிவப்பு திராட்சை – 5
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
உப்பு சிறிதளவுசெய்முறை:* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

* ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த வாழைத்தண்டு, மாதுளம் முத்துகள், சிவப்பு திராட்சை, மிளகு தூள், சிறிதளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கடைசியில் எலுமிச்சை சாற்றினை பிழியவேண்டும்.

* காலை உணவாக இதை சாப்பிடலாம். உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.