கல்லூரி மாணவி தற்கொலை-உருக்கமான கடிதம்

picture
கல்லூரி மாணவி கலைவாணி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஏனென்று விசாரணையின் போது எழுதிவைத்த கடிதம் கிடைத்தது. கலைவாணி வயது பத்தொன்பது கோயம்பத்தூரின் கல்லாமேட்டின் குடியிருப்பின் சிவக்குமாரின் மகள் தான் இவர். இவர் அங்கிருந்த தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ படித்து வந்தார்.
எப்போதும் போல் வீட்டிற்கு வந்த கலைவாணி இரவு மருந்து குடித்துவிட்டு மயங்கிப்போனார். உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றும் பலனில்லை. பெண் இறந்துவிட்டார்.
பின் காவல் துறை வழக்குப்பதிந்து விசாரித்தப்போது கலைவாணி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
”அன்புள்ள அம்மா என்னை மன்னித்துவிடு, நான் காதல் தோல்வி என்றோ அல்லது வேறு காரணங்கள் என்றோ நினைக்காதீர்கள். சனி அன்று விரிவுரையாளர் பானுமதி வகுப்பறையில் பாடம் நடத்தியப்பின் இடையில் பேசிக்கொண்டு இருந்தபோது பார்த்தவுடன். என்னை அவர் முன்னாடி வந்து பாடம் எடுக்கச்சொன்னார். ஆனால் எல்லாரும் பேசிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் நான் பாடம் முடித்துவிட்டு முடித்துவிட்டேன் என்று கூறினேன் அவர் முடித்துவிட்டாயா என்று எல்லாரையும் கைதட்டச்சொன்னார். பின் என்னை கூப்பிட்டு நிற்க வைத்துவிட்டு அழுகின்றாயா அழுகின்றாயா என்று கேட்டார். நான் அவமானம் தாங்காமல் நின்றேன். தனியா கூப்பிட்டு திட்டியிருந்தாலும் பரவாயில்லை.  எனவே நான் மீண்டும் கல்லூரிக்கு அவமானத்தோடு செல்ல முடியாது. நான் செய்தது தப்பு தான் என்றாலும் அதற்காக இவ்வாறு அவமானம் செய்வதா அந்த ஆசிரியைக்கு தண்டனை வாங்கிக்கொடுங்கள் இல்லையேல் நான் செத்ததற்கு அர்த்தமே இல்லை. என்று எழுதியுள்ளார்”
காவல் துறைக்கு இந்தக்கடிதம் கிடைத்தவுடன் அவர்கள் இதைக்கொண்டு விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இந்தக்கடிதத்தில் உள்ள வரிகள் அவருடையது தானா என்று சம்பந்தப்பட்டவர்களை கொண்டு விசாரனை நடத்திவருகின்றனர்.
விரிவுரையாளர் பதவி ஒன்றும் பெரிய ராணுவப்பதவி கிடையாது.  பள்ளி ஆசிரியா்கள் கூட இப்போதெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் கல்லூரி விரிவுரையாளர்கள் தங்களது மாணவிகளையும் மாணவர்களையும் தமக்கு போட்டியாக நினைத்துக்கொண்டு கொடுமை படுத்துகின்றனர்.  இன்டர்நல் மார்க் என்று ஒன்றை வைத்துக்கொண்டு பசங்களை படாத படுத்துகின்றனர்.  அதில் ஒன்றுதான் இந்தப்பெண் மரணம். எல்லா ஆசிரியர்களும் ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும் தன் பிள்ளையும் ஒரு ஆசிரியரிடம் தான் படித்து முடிக்கவேண்டும் என்று. ”பிழையை திருத்த  பேனா திருத்தமாக இருக்கவேண்டும்”

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.