தலையில்லாத அதிசயக்குழந்தை

sull less baby

தலைமுடி இல்லாமல் குழந்தைகள் பிறக்கும் பின் குழந்தைகளுக்கு நாளாக நாளாக முடி வளர்ந்துவிடும்.  ஆனால் தலையே இல்லாமல் குழந்தைபிறந்தால் என்ன சொல்ல அதுவும் சுகப்பிரசவமாக குழந்தைப்பிறந்து வளர்ந்தால் என்ன சொல்ல அப்போ மூளை எங்கிருக்கும் அது எங்கோ இருக்கும்.

images (4)

தாயுடன் ஜாக்சன்

அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு முதலில் பிறந்த குழந்தை மண்டைப்பகுதியில் ஒடுகள் அற்று காணப்பட்டது ஆனால் அக்குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகின்றது அவன் பெயர் ஜாக்சன். அவனது தாயார் கருவுற்றபோது சோதனை செய்து பார்க்கையில் குழந்தைக்கு மண்டையோடு வளரவில்லை என்று தெரிந்துக்கொண்டு அதை டாக்டர் கலைக்குமாறு கேட்டுக்கொண்டார் ஆனால் தாய் மனசு வேண்டாம் நான் பெற்றுக்கொள்கின்றேன் எனக்கூறி பெற்றெடுத்து வளர்த்துவிட்டனர்.

அவனது தந்தை கூறும்போது நாங்கள் எந்த நிலைமைக்கும் தயாராக இருந்தோம் நாங்கள் அவனை இழக்கவும் நேரிடும் என்று தெரியும் மனதை தைரியப்படுத்திக் கொண்டோம். ஆனால் அவன் நன்றாக விளையாடுகின்றான். தூங்குகின்றான் என்று கூறுகின்றனர்.

பொதுவாக கருத்தரிக்கும் போது குழந்தையின் மண்டையோடு தான் முதலில் வளரும் 3 மாத சிசுக்கு கூட மண்டையோடு இருக்கும் ஆனால் இவனுக்கு மண்டையோடு குறைபாடு நோய் தாக்கியதாக மருத்துவர் கூறுகின்றார். கடவுள் அருளால் இக்குழந்தை எவ்வித கஷ்டமும் அனுபவிக்கக்கூடாது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.