Digital India and Father of Digital India-

963691-MarkFB-1443426409-956-640x480

இந்தியப்பிரதமர் திரு நரேந்திரமோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது Facebook ன் மார்க் ஜூபர்க்கை சந்தித்தப்பின் அவர் தனது புரோபைல் பிக்சரை Digital India வை ஆதரிக்கும் வகையில் மாற்றினார்.  உடனே நம்மவர்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை ஆதரிக்கின்றோம் பேர்வழி என்று அனைவரும் புரோபைல் பிக்சரை மாற்றிவிட்டார்கள்.

380209-narendra-modi-digital-india

டிஜிட்டல் இந்தியாவின் முகப்பு படம்

இதைப்பார்த்துக்கொண்டு இருந்த காங்கிரஸ் உடனே தனது பழைய கதையை தூசி தட்டி எடுத்து நாங்கள் தான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னோடி என்று மறைந்த பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் போட்டோவை புரோபைல் பிக்சராக மாற்றிவிட்டார்கள் கூடவே Father of Digital India என்று வசனத்தையும் சேர்த்துவிட்டார்கள்.

CP96xX2UkAACE4Z

Father of Digital India

உண்மைதான் மறைந்த பெருந்தலைவர் ராஜீவ் அவர்கள் தான் இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.  அவரது காலத்தில் இந்தியாவில் கணினிகள் அறிமுகமாகின. ஆனால் அவர் மறைந்துவிட்டார் ஆனால் கணினி வளர்ந்துவிட்டது.

இரு கட்சிகள் சுவற்றில் விளம்பரம் செய்ய அடித்துக்கொண்ட காலம் போய் இப்போது Facebook புரோபைல் பிக்சரில் யார் முதலிடம் பிடிப்பது என்று அடித்துக்கொள்ளும்போதே தெரியுது. Analog இந்தியா என்றால் என்ன Digital இந்தியா என்றால் என்ன நாங்க அப்படியே தான் இருப்போம் என்று சொல்லாமல் சொல்கின்றார்கள்.  ஆனால் இனிமேல் எல்லாம் சுவற்றில் கட்சிப்பிரச்சாரம் இருக்காது எல்லாம் டைம்லைனில் தான். டிஜிட்டல் இந்தியா மக்களுக்கு நல்லதோ கெட்டதோ ஆனால் அரசியல் பிரச்சாரங்கள் எளிதில் நடக்கும் செலவிருக்காது. இந்தியா, டிஜிட்டல் இந்தியாவாக மாறிக்கொண்டே இருப்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.