வயசானாலும் உன் அழகு குறையவே இல்லை

youngs
சில பேரைப்பார்த்தீங்கன்னா இரண்டு குழந்தைக்கு தகப்பனாலும் தாயானாலும் அவர்கள் இன்னும் முன்னாடி எப்படிப்பார்த்தோமோ அப்படியே தான் இருப்பார்கள். அவர்கள் தான் எப்படி அப்படியே இருக்கின்றார்கள் என்று நமக்கு வியப்பாக இருக்கும் இதற்கு காரணம் அவர்களது மரபணு மற்றும் உடல்வாகு என்று சொல்லி உங்கள் மனதை தேற்றிக்கொண்டு நழுவிவிடுவீர்கள் எனக்கு தெரியும்.  ஆனால் உண்மையில் அவர்களது பழக்க வழக்கங்கள் தான் அவர்களை இப்படி இளமையோடு வைத்திருக்கின்றது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
 1. பழங்களை நிறைய உண்ணவேண்டும் மாதத்திற்கு நான்கு நாட்கள் கண்டிப்பாக பழங்களைத்தவிர வேறெதுவும் உண்ணாமல் இருந்தால் ஆண்டி-ஆக்ஸிடன்ட் உடலுக்கு கிடைத்துவிடும். பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றில் அதிக அளவு இந்தச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
2. நெல்லிக்காயை பல்போட்டு தேனில் ஊர வைத்துப்பின் அவற்றை தினமும் எடுத்து காலையில் சாப்பிடவேண்டும்.
3. சாம்பல் பூசணிக்காயை நன்றாக மிக்ஸியில் அடித்து தேன் அல்லது பனைவெல்லம் கலந்து ஒரு டம்ளர் தினமும் பருகி வாருங்கள். அப்பறம் தெறியும்.
4. பொன்னாங்கண்ணிக் கீரையை வீட்டு பூந்தொட்டியில் போட்டு வளரவிடுங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். தினமும் காலையில் எழுந்து பற்சுத்தம் செய்துவிட்டு வெறும் வயிற்றில் பொன்னாங்கண்ணி தலையை 10 கிள்ளி எடுத்து மென்று தின்று தண்ணீர் பருகி வாருங்கள். மேனி பொன்னாகும்.
5. இரவுத்தூங்கும் போது திரிபலா சூரணம் என்று நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அதை ஒரு ஸ்பூன் பொடி விரும்பி சாப்பிடுங்கள். கண்கள், மலச்சிக்கல் மற்றும் இளமை அனைத்தும் கிடைக்கும்.
6. நாம் சாப்பிடும் மிகவும் தவறானத வெந்ததை தின்கின்றோம். வடித்ததை சாப்பிடுகின்றோம். இதில் வடிந்ததை மறந்துவிடுகின்றோம். எனவே எங்கே சத்து கிடைக்கின்றது. ருசியை மட்டுமே கவனித்த நாம் பசியாறினால் போதும் என்று சாப்பிடும் நிலைக்கு வந்தோம் ஆனால் அது உடலுக்கும் சக்தி தரக்கூடியதாக இருக்கவேண்டும்.  கீழ்க்கொடுக்கப்பட்ட உணவுகளில் ஒன்று தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்க்கவேண்டும்.
          1. காலையில் முளைக்கட்டி பயறு ஒரு கை தினமும்.
          2. கொண்டைக்கடலை பச்சையாக ஊறவைத்தது.
          3. உளுந்து ஊறவைத்தது பச்சையாக (அ) உளுந்தக்கஞ்சு.
          4. மதிய வேலையில்மூன்று கேரட்கள் பச்சையாக.
          5. இரவு வேலையில் சாப்பாட்டின் பின்னர் வாழைப்பழம் இரண்டு.
          6. வேர்க்கடலை நிறைய சாப்பிட வேண்டும்.
          7. வார இறுதியில் வாழைத்தண்டு கண்டிப்பாக.
7. மணத்தக்காளிக்கீரையை நன்றாக வதக்கி  சாப்பிட வயிற்றில் இருக்கும் புண்ணை நீக்கும். கரசாலைகீரை தேமல், கேச வளர்ச்சி போன்றவைகளுக்கு நிவாரணம் தரும்.
8. ஆண்கள் சீக்கிரமாக வயோதிகத்தை எட்டிவிடுவர் ஏனென்றால் அவர்கள் அதிகமாக உழைக்கவேண்டும்.  இதனால் உடலில் பலச்சுரப்பிக்கள் தங்களது பணியை முடித்துக்கொள்ளும். இதைநீக்கவே சுரக்காய் உள்ளது. சுரப்பிகளுக்கு சுரக்காய் என்று சொன்னால் மிகையாகாது. அதை சாறாகவோ அல்லது கூட்டுசெய்து தண்ணீரை வடிக்கமால் சாப்பிடவேண்டும். அப்பறம் பாருங்கள் உங்கள் சுரப்பிகள் எல்லாம் ரீ-என்ட்ரி ஆகும்.
9. அசைவ உணவு உண்ணுபவர்கள் நேரிடையாக ஆடு, மாடுகளிடம் இருந்து விட்டமின், புரோட்டீன், கொழுப்பு போன்றவைகளை பெற்றுவிடுகின்றனர்.  ஆனால் சைவப்பிராணிகளான நாம் சாப்பிடுவதெல்லாம் கொண்டைக்கடலை மற்றும் எள்ளுருண்டை மற்றும் பட்டாணிக்கடலை தான். வாரத்தில் ஒரு நாள் கறி எடுத்தால் 500 ருபாய் ஆகிவிடும் ஆனால் மாதம் முழுவதும் நாம் சாப்பிட நமக்கு கொண்டைக்கடலை பட்டாணி வாங்க 500 ருபாய் ஆகாது.
10. வெற்றிலையைச் சாப்பிடுங்கள் தவறில்லை ஆனால் வெற்றிலையை சுண்ணாம்புடன் சாப்பிடுவது தான் தவறு அதை வெறும் கொட்டைப்பாக்கு அல்லது சீவலுடன் சேர்த்து நன்றாக உமிழ்நீரில் வைத்து மென்று சாற்றினை மட்டும் இறக்கவேண்டும். பின் சக்கையை துப்பிவிட வேண்டும்.
11. தினமும் தண்ணீர் ரொம்ப முக்கியம் இயற்கை நமக்கு தண்ணீரைக்கொடுத்து அதைக்குடிக்கவும் சொல்கின்றது.  ஒரு நாளைக்கு மினிமம் 3 லிட்டர் தண்ணியாவது குடிக்கவேண்டும். ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை 200 மிலி தண்ணீர் கண்டிப்பாக குடிக்கவேண்டும்.  ஏனெனில் நம் உடல் ஒரு வெப்ப உமிழ்வினையை நடத்திக் கொண்டே இருக்கும் உள்ளிருக்கும் உறுப்புகள் மற்றும் சுவாசம் ஆகியவை வெப்பத்தை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். எனவே உடலை தட்பவெப்பமாக வைத்துக்கொள்ள குளிர்ந்த நிலையில் திரவம் தேவைப்படும். எனவே இனிமேல் தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
12. வயது ஆக ஆக சருமத்தினை தாங்கிக்கொண்டிருந்த தசைகள் தளர ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் போதிய பிடிமானம் இல்லாமல் தளர ஆரம்பித்து தொங்கிவிடுகின்றது. இதை நாம் பாதுகாக்க தசைகளை இறுக்கமாக்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.  ஜிம்முக்குப்போய் வொர்க்கவுட் செய்ய நமக்கு டைம் கிடையாது.  ஆனால் வீட்டில் ஸ்கிப்பிங் செய்ய பழகிக்கொள்ளுங்கள் உடலின் அனைத்து அசைவுகளுக்கும் பலன் தரக்கூடியது.
13. எல்லோரும் குளிக்க சோப்பைத்தான் பயன்படுத்துகின்றோம் சிக்கனமும் அதுதான் ஆனால் சோப்பைப்போட்டு பின் பயத்தமாவை அரைத்து தண்ணீரில் கலந்து உடலில் அல்லது முகத்தில் தேய்த்துக்கொண்டால் முகம் பளபள வென்று இருக்கும்.
14. வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாத்தில் இருமுறை பௌர்ணமி அமாவசையன்று நல்லெண்ணெய் உடல் முழுவதும் பூசிவிட்டு பச்சைத்தண்ணீரிலே சீக்காய்த் தேய்த்து குளிக்க வேண்டும் ஏனெனில் உடலில் வெப்பம் தணியும். அதேசமயம் அழுக்கு நிறைய நம் சருமத்தில் உள்ள தோலின் நுண்துளைகளை அடைத்துவிடும். அதை நல்லெண்ணைய் திறந்து விடும்.
15. காலையில் 5 மணி வாக்கில் எழுந்து நன்றாக மூச்சை இழுத்து சுவாசப்பயிற்சிகளை செய்து வரவும்.  இதனால் ஹார்மோன் சுரப்பிகள் சரிவர இயங்கு கின்றன.
16. தயவு செய்து எக்காரணம் கொண்டும் பேர்னஸ் கிரீம்களை சிவக்கின்றேன் பேர்வழி என்ற பயன்படுத்தாதீர்கள். அதில் கெமிக்கல்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.  அவைகள் எதற்கும் பயன்படாதவை.  பயன்பாட்டின் போது முகத்தை வெண்மையாக காண்பிக்கும். பயன்பாட்டினை நிறுத்தியப்பின்பு அவைகள் தேகத்தை கெடுத்ததை அறிவீர்கள்.
17. கண்ணங்குழியில் கருமை கழுத்துப்பகுதியில் கருமை ஆகியவற்றிற்கு உருளைக்கிழங்கு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சையாக மசித்தப்பின் அவற்றை எடுத்து கருமையில் பூசி அரைமணிநேரம் காயவைத்து விட்டு பின்பு குளித்துவிடவும். கருமை கண்டிப்பாக மறையும் இது ஒரு வேதியல் மாற்றம்.
18. இவ்வளவு சொல்லியிருக்கின்றேன் உங்களுக்காக நீங்கள் இதில் ஏதாவது ஒன்றைக்கடைப்பிடித்து தொடர்ந்து செய்து வாருங்கள் எதுவுமே நம்பிக்கையுடன் ஒரு மண்டலத்திற்கு செய்தப்பின் அப்பறம் பாருங்கள். தயவு செய்து குடி, புகை, அசைவ உணவுகள் உண்பவர்கள் இதைப்பின்பற்றவேண்டாம்.  இவற்றை விட்டுவிட்டு இயற்கைக்கு மாறினால் போதும். இயற்கை அப்போதிலிருந்து  இப்போது வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது என்பதை கவனிக்கவும்.  அதை பின்பற்றும் நாமும் அப்படியே தான் இருப்போம்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.