மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

tengu

காய்ச்சலில் மிகவும் கொடுரமானது சிக்கன் குன்யா மற்றும் டைபாய்டு ஆகியவைகள் ஆகும். அதில் அதிகமாக தாக்கி மூட்டுக்கு மூட்டு வலிகளை கொடுத்து ஆளை படுக்க வைத்துவிடும். அதேபோல் தான் இந்த டெங்கு காய்ச்சல்.

திருநெல்வேலிப்பகுதிகளில் 12 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு ஏற்பட்டு ஏற்கனவே சிறுவன் ஒருவன் இறந்தும் போய் விட்டான். இதனால் மற்ற மாவட்டங்களிலும் டெங்கு பரவும் பீதி அதிகரித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் மழைபெய்தவுடன் உருவாகின்ற கொசுக்களால் வருகின்றன.  இந்த டெங்கு வகைக் கொசுக்கள் சாக்கடை நீரில் தயாராவது கிடையாது நன்னீர் மூலங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சற்று பெரிய அளவு கொசு கடிக்கும் போது தனது வயிற்றுப்பகுதியை மேல் நோக்கி தூக்கிக்கொண்டு கடிக்க ஆரம்பிக்கும். அப்படியே விட்டால் வயிற்றை நிரப்பிக் கொண்டுதான் போகும்.

Mosquito.focus-none.width-570

டெங்கை உருவாக்கும் கொசுக்கள்

அறிகுறிகள்

1. முதலில் தலை மற்றும் முதுகு வலி.

2. வெயிலில் நின்றாலும் குளிரும்.

3. வயிற்றுப்போக்கு சிலப்பேருக்கு ஏற்படும்.

4. கை கால் வலி அசந்துப்போகும்.

5. இறுதியாக காய்ச்சல் ஏற்பட்டு மேற் சொன்ன அனைத்தும் உருவாகும்.

பாதுகாப்பு

1. பாதுகாப்பு தான் முதலில் செய்யவேண்டும் கிராமப்புறங்களில் தண்ணீர் வீட்டைச்சுற்றி தேங்காதவாறு வடிகால் அமைக்கவேண்டும்.

2. நகர்ப்புறங்களில் செடி மற்றும் தொட்டில் செடிகளில் தண்ணீர்தேங்க வேண்டாம்.

3. காலில் செருப்பு அணியாமல் மழையில் நடக்கவேண்டாம்.

நிவாரணம்

1. அறிகுறிகள் தென்படும் போதே உடனே நிலவேம்பு பவுடரை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அவற்றை ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கரைத்த நாளுக்கு மூன்று முறை அருந்தவேண்டும்.

2. குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டாலே நிலவேம்புக்குடிநீரை மேற்சொன்னவாறு குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

3. மிகுந்த காய்ச்சல் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்க்க வேண்டும்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.