செவ்வாய்க்கு தண்ணில கண்டம்!

nasa water

எப்போது மனிதன் விண்வெளிக்கு ராக்கெட் விட ஆரம்பித்தானோ அன்றிலிருந்து இன்றுவரை பூமியைப்போல வாழ வழியுள்ள வேறுக் கோள்களையோ அல்லது துணைக்கோள்களையோ தேடிக்கொண்டுதான் இருக்கின்றான்.  இப்பரந்த அண்டவெளியில் நம் வாழும் புவியைப்போல வேறு ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்.  நம் மனித முயற்சியால் புவியைப்போன்ற தோற்றம் உடைய செவ்வாயைதான் அடைய முடிந்தது.

mars

செவ்வாய் துருவப்பகுதியில் உருவான பனிகள்

அதில் கண்டிப்பாக தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் அவ்வப்போது  விண்கலம் அனுப்பிவருகின்றது.  அதாவது நீரோடைப் போன்று ஓடிய மண் மற்றும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் ஆகியவை தான் ஆனால் இன்னும் ஒரு சொட்டு நீர் கூட கிடைத்ததில்லை.  அவ்வாறு தண்ணீர் கிடைத்திருந்தால் கண்டிப்பாக அந்தத்தண்ணீரில் வாழும் உயிரினங்கள் இருக்கும்.  எனவே அங்கே வாழ்வதற்கான ஆதாரங்களை அமைத்துக்கொள்ள முடியும்.  இதுதான் மனிதனின் நோக்கம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது வெளியீட்டில் செவ்வாய்கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று வெளியிட்டுள்ளது. அவர்கள் தங்களது செய்தித்தொடர்பு அலுவலர்களிடம் ஜிம் கிரீன் கூறியது. பெரும்பாலும் செவ்வாய்க்கோளில் தண்ணீர் இருக்கும் புவியைப்போன்று சரியான தட்ப வெப்ப நிலை நிலவுவதால் கண்டிப்பாக மற்ற கோள்களைப் போல் அல்லாமல் செவ்வாய் தண்ணீர் கொண்டிருக்கும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.  இப்போது எங்கள் விண்கலம் செவ்வாய் இருந்து கிளிப்பிங்ஸ் அனுப்பியுள்ளது. நாங்கள் அதை ஆராய்ந்து வருகின்றோம்.

மேலும் பனிக்காலங்களில் நம்புவியைப்போல தண்ணீர் பனியாக மாறிவிடுகின்றது பின் வெப்பநிலைக்காலங்களில் தண்ணீராக பனி உருகி ஓடுகின்றது.

என்னவோ தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் சொன்னது போல செவ்வாய்க்கு தண்ணியால் ”கண்டம்” வந்துடும்.  கண்டம் என்றால் நாடுகள்.  அங்கேயும் நாடுகள் தோன்றும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.