நீ என்ன பெரிய ”பிஸ்தாவா?”

Fresh pistachio

நீ என்ன பெரிய பிஸ்தாவா என்று யாராவது உங்களை கேட்டிருப்பர். எனவே உங்களுக்கு பிஸ்தா என்ற பெயர் தெரியும்.  ஆனால் அதைச் சாப்பிடும் பாக்கியம் யாருக்கும் அவ்வளவாக கிடைத்திருக்கின்றாது.  இப்போது அதன் பலன்களை தெரிந்துக்கொள்ளலாம்.

பிஸ்தா என்பது மரம்வகையாகும் இதில் விளையும் பருப்புகள் மிகவும் சத்துள்ளவை இவைகளை அதிகமாக சீனர்கள் சாப்பிடுவார்கள் மிகவும் நல்ல நற்குணம் வாய்ந்த பருப்புவகைகளில் பிஸ்தாவும் உண்டு. அமெரிக்காவில் தான் அதிகமாக பிஸ்தா விளைகின்றது.

பிஸ்தா பருப்பினை சீனர்கள் சிரிக்கும் பருப்பு என்று அழைக்கின்றனர். ஏனென்றால் பருப்பு முற்றியப்பின் அதுவாகவே வெடித்து வெளிப்படும் எனவே அவ்வாறு பெயர் வைத்திருக்கின்றனர். சீனர்கள் தங்களது மகிழ்ச்சியான தருணங்களிலும் விழாக்காலங்களிலும் அதிகமாக பிஸ்தாவை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்கின்றனர்.

நமது நாட்டினைப் பொறுத்தவரை பிஸ்தா பருப்பு அதிக விலைமற்றும் சூட்டைக் கிளப்பக் கூடியது என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள். நேரடியாக அவற்றை சாப்பிட வில்லை யென்றாலும் ஐஸ்கிரிம் மற்றும் கேக் மற்றும் சிலர் குளிர்பானங்களில் கலந்து குடிக்கின்றனர்.

ரஷ்ய நாட்டினர் கோடைகாலத்தில் பீர் குடிக்கும்போது, அதற்கு சைடு டிஷ் ஆக பிஸ்தா உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரித்துக் கொள்வதற்காக மதுபானத்துடன் சிறிதளவு பிஸ்தாவையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் :

1. தினமும் பிஸ்தா சாப்பிட்டு வருவதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய்க் குறைப்பாடுகள் தடுக்கப்படும்.

2. ரொட்டி மற்றும் பிஸ்கட்களுடன் பிஸ்தாவைச் சேர்த்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகின்றன.

3. பசி ஏற்படாதவர்களுக்கு பசியைத்தூண்டி அவர்களுக்கு பசி ஏற்படச் செய்கின்றது.

4. அதிகமாக பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் அவர்களின் கொழுப்புச் சத்து குறைந்துவிடுகின்றன.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.