மூலமிருக்கா சத்தம் போடாம இத படிங்க

piles

மூலநோயானது மிகவும் கொடூரமான நோய் ஏனென்றால் வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.  உட்கார்ந்தால் வலிக்கும் வெகு நேரம் நின்றால் வலிக்கும் வயிற்றை முக்கினால் வலிக்கும் இதுபோல் துன்பம் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.

மூலம் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. மூலம் பெரும்பாலும் வெப்பமிகுதியால் தான் வருகின்றன.

2. காலையில் அவசர அவசரமாக வெப்ப சாப்பாட்டினை சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்த நிலையில் வேலைசெய்கின்றவர்களுக்குத்தான் மூலம் அதிகமாக ஏற்படுகின்றன.

3. உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்நோய் மிக எளிதாக வந்துவிடும்.

அறிகுறிகள்

1. மூலம் ஏற்படுவதற்கு முன்னால் ஆசனவாயின் ஓரத்தில் புண்கள் காணப்படும். பின் அவைகள் பெர்தாக ஆரம்பிக்கும்.

2. மிகுந்த வலியுடன் தான் கழிவுகள் வெளிப்படும். அதனால் அதிகமாக சிரப்பட்டு வெளியேற்றப்படும் போது  இரத்தக்கசிவுடன் வெளியேறும்.

3. வேதனை அளிக்கக்கூடிய வகையில் புண்கள் மற்றும் எரிச்சல் சிறு கொப்புளங்கள் சிலந்தி ஆகியவை பின்பகுதியில் தோன்றும்.

மருத்துவம்

1. முளைக்கீரை மற்றும் துத்திஇலைகளை சரிபங்காக இரண்டையும் சேர்த்து பருப்பு கலந்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மூலம் சரியாகிடும்.

2. பொன்னாங்கன்னி மற்றும் பருப்புச்சேர்த்து எடுத்து சமைத்து சாப்பிட்டால் பௌத்திரக்கட்டிகள் கூட உடனே கிளம்பிவிடும்.

3. கடுக்காய்ப்பொடியானது கடைகளில் கிடைக்கக்கூடியது அவைகளை அகத்திக்கீரை சாற்றில் கலந்து கொதிக்க வைத்து கசாயம் தயார் செய்து பருகினால் உடனே மூலம் சென்றுவிடும். மேலும் அவற்றை இனிமா கொடுப்பதால் கூட புண்கள் எளிதில் ஆறிவிடுகின்றன.

4. கானா வாழை இலையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மூலச்சூட்டால் உருவாகும் வெப்பம் மற்றும் உள்முலத்தைப் போக்கிவிடும்.

5. வெங்காய்த்தாள், பொடுதலை, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக அரைத்துச்சாப்பட்டால் மிக வேகமாக மூலம் குறைந்துவிடும்.

6. கடுக்காய்ப்பொடி கலந்த திரிபலா சூரணமானது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.  அந்தப் பொடியை வாங்கி வந்து தினமும் இரவு உறங்கும் போது சாப்பிட்டு படுத்தால் மூலம் என்பதே ஏற்படாது. மலமிழங்கி தானாக வரும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.