நாய்கடிச்சா திருப்பிக்கடிச்சுடாதீங்க

dogbit

முதலில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நம் வீட்டுச் சாப்பாட்டைத்தின்றுகொண்டு வளரக்கூடியவைகள் இவைகள் நம்மைக்கடிப்பதால் எந்தப்பிரச்சினையும் கிடையாது. என்னையெல்லாம் என் ஜானி எத்தனை முறை கடித்துள்ளது. ஆனாலும் எதுவும் ஆனதில்லை.

ஆனால் தெருவில் பல நாய்களிடம் கடிபட்டு ரேபிஸ் என்ற நோய் தாக்கிய நாய் கடித்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்நாய் எப்போதும் வாயில் எச்சிலை ஒழுதுக்கொண்டே இருக்கும்.

நாய்களிடம் பழகும் முறைகள்

1. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் குட்டி பருவத்தில் இருந்து நம்மை பார்த்து வளருபவை அதனால் அவைகள் நம்மீது மிகுந்த பாசம் மற்றும் நன்றியுணர்வுடன் இருக்கும்.

2. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களாக இருந்தாலும் சாப்பாடு விசயத்தில் கவனம் வேண்டும். அதற்கென தனி இடத்தில் தான் சாப்பாடு இடவேண்டும். தினமும் ஒரே இடத்தில் சாப்பிடவேண்டும்.

3. முடிந்தவரை நாய்க்கு அசைவம் பழக்காதீர்கள் வீட்டில் அசைவம் செய்யும் போது நாயின் மூக்கில் விக்ஸ் அல்லது அமுர்தாஞ்சன் எடுத்து தடவிவிட்டுவிடுங்கள். அதால் வாசம் பிடிக்க முடியாது. அசைவம் கொடுத்த நாய்கள் மாமிச உண்ணியாக மாறிவிடும். அதன் குணங்களும் சாத்வீகத்தில் இருந்து மாமிச உண்ணியாக மாற்றமடைய நேரிடும்.

4. குழந்தைகளை வீட்டுநாயுடன் விளையாடச் செய்கின்றோம் தவறில்லை ஆனால் நாம் அருகில் இருக்க வேண்டும்.

5. நாய்கள் உணவு உண்ணும் போது தடவிக்கொடுக்கக் கூடாது அதற்கு கோபம் வந்து கடித்து விடும்.

6. பெரும்பாலும் நாய்கள் கழுத்தில் பெல்ட் அணிந்து கட்டியே இருக்கவேண்டும்.

7. நம் வீட்டு நாய்களின் முன் வேறு நாய்களையோ பூனைகளையோ கொஞ்சக்கூடாது அது நாய்க்கு வெறுப்பேற்றும்.

நாய்க்கடித்தால் செய்யவேண்டியவை

1. முன்பு சொன்னது தான் வீட்டு நாய்க்கடித்தால் கவலையில்லை உடனே தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி அல்லது சோப்பினைக்கொண்டு கடிபட்ட இடத்தில் உள்ள இரத்தத்தை வெளியேற்றிவிட்டு கழுவிவிடவும். பின் சுண்ணாம்பு வைத்துவிட்டால் போதும்.கத்திரிக்காய் மற்றும் தேங்காய்களை புண் ஆறும் வரை உண்ணக்கூடாது.

2. ஆனால் வெறிநாய்க்கடித்தால் மேற்சொன்ன முதலுதவிகளை செய்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடவும். பயப்படாதீர்கள் தொப்புளைச்சுற்றி யெல்லாம் 16 ஊசிகள் போடமாட்டார்கள். ஒரே ஒரு ஊசி போட்டுவிட்டு தொற்று நீக்கிவிடுவார்கள்.

 

 

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.