24-காரட் தங்கம் தான் கேரட்

கேரட்டைப்பற்றி எல்லாருக்கும் தெரியும் அவற்றைப்பயன்படுத்தி நாம் சமையல் செய்வோம் மேலும் கேரட்டை பச்சையாகவும் சாப்பிடுவோம்.  ஆனால் கேரட்டின் முக்கியப்பயன்கள் நமக்கு தெரியாது.

மாலைக்கண் நோய் கண்பார்வை சரியாக தெரியாதவர்கள் இந்த கேரட்டை பச்சையாகவே சாப்பிடுவர்.  ஆனால் அவ்வாறு சாப்பிடுவதைவிட அதை அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மேலும் அதன் சக்தி அதிகரிக்கும்.

கேரட்டில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கிருமிகளை அழிக்கக்கூடியது. தினமும் மேற்சொன்ன மாதிரி நிறைய கேரட்களை சாப்பிட்டு வந்தால் சீக்கரமாக புற்றுநோயின் தாக்கம் குறையும். நாம் கேரட்டை தொடர்ந்து தின்றால் புற்றுநோய் நம்மைத்தாக்காது.

வயிறு கெட்டுப்போனால் அதன்பின் வாயில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எத்தனை முறை பல் துலக்கினாலும் சரி சிறிது நேரத்தில் மீண்டும் வந்துவிடும். குழந்தைகள் மாடுகள் ஆடுகள் இவற்றின் வாயை நுகர்ந்து பாருங்கள் பால் வாசம் வீசும். ஏனென்றால் அவர்கள் உணவுமுறை இயற்கையானது மிகவும் உடலுக்கு ஏற்றது.  ஆனால் நாம் சாப்பிடுவது நம் மனதிற்கும் நாவிற்கும் பிடித்த உணவு மட்டுமே இதனால் தான் வயிறு கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகின்றது. அவ்வாறு துர்நாற்றம் வீசுவது தெரியவந்தால் உடனே கேரட் ஜூஸை குடிக்கவேண்டும். வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் தன்மைகொண்டது.

இதற்கெல்லாம் காரணம் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற பொருள்தான். மிகவும் தாங்காத பசி ஏற்படும் போது கேரட் ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள் பசியிருக்காது.  மூன்று வேலையும் உணவுடன் கேரட் சாப்பிட்டு வாருங்கள். உங்களை அறியாமல் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

 

 

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.