இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை!

currency
என்ன கொடுமை சார் சினிமாவில் வருவது போல வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம் போட்டுவிட்டு அந்த வங்கியே அதற்கு அபதாரத்தையும் தந்துள்ளது. என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்பூரில் உள்ள மாநகராட்சி வளர்ச்சிப்பணிக்காக MLA  பணநிதியின் பேரில் வழங்கப்பட்ட நாற்பது லட்சம் கடந்த ஆண்டு காசோலையாக Corporation Bank  க்கு வழங்கப்பட்டது.  அதில் டேட்டா என்ட்ரி தப்பாக போக ஒரு எண் வித்தியாசத்தில் திருப்பூரின் ராக்கியாப்பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் என்றவர் கணக்கில் சேர்ந்துவிட்டது.
அவரும் அதைப்பார்த்துவிட்டு திரும்ப ஒப்படைக்காமல் அதே நிலையில் அவர் அதை எடுத்து செலவுசெய்து திருமணம் வீடு என்று அழித்திருக்கின்றார். பின் வங்கி கணக்கு முடிவடையும் போது காணமற்போன நாற்பது லட்சம் தெரியவர அது இவ்வாறு மாறிப்போனதை கண்டுபிடித்து போய் கேட்டாள். அவர் அதை செலவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
வங்கிகேட்கும் போதெல்லாம் இதையே கூறிவந்ததால் நொந்த வங்கி அபாரதமாக 40 லட்சத்தையும் தானே கட்டி விட்டு விதியை நொந்துகொண்டது.  அந்த குணசேகரன் என்பவர் LIC

திருப்பூரில் தவறுதலாக வேறுநபரின் கணக்கில் 40 லட்சம் ருபாயை சேர்த்தால் அந்த தொகையை அந்த வங்கியே திருப்பிசெலுத்தியுள்ளது.
திருப்பூரில், மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக எம்எல்ஏ, எம்பியின் நிதியில் இருந்து வழங்கப்படும் பணம் டிடி.யாக மாற்றப்பட்டு மாநகராட்சியின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுவது வழக்கம்.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிக்கு எம்எல்ஏ, எம்பி நிதியில் இருந்து வழங்கப்பட்ட 40 லட்சத்து 11 ஆயிரத்து 125 ரூபாய் கடந்த 2012 ஆம் ஆண்டு டிடி.யாக திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள கார்ப்பரேஷன் வங்கிக்கு அனுப்பப்பட்டது.
அந்த தொகை வங்கியில், மாநகராட்சியின் கணக்கில் வரவு வைக்கும் போது, ஒரு எண் மாறியதால்  தவறுதலாக திருப்பூர் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த எல்ஐசி ஏஜண்டு குணசேகரன்  என்பவரின் கணக்கில் சேர்ந்தது.
தனது கணக்கில் ரூ.40 லட்சம் சேர்ந்திருப்பதைப் பார்த்த குணசேகரன் இந்த தொகை எப்படி வந்தது? என்று தெரியாமல் தவித்துள்ளார். இதனால், யாராவது வந்து கேட்டால் பணத்தைத் திருப்பி கொடுத்து விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால்,  பணத்தை யாரும் திருப்பிக் கேட்கவில்லை.
இதனால் மகிழ்ச்சியடைந்த குணசேகரன் அந்த பணத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, முதல் கட்டமாக ஒரு பெரிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். பின்னர் தனது மகன் மற்றும் மகளுக்கு ஆடம்பரமான முறையில், திருமணத்தை நடத்தியுள்ளார்.
இப்படியாக, தனது வங்கிக் கணக்கில் இருந்த 40 லட்சம் ரூபாயையும் எடுத்து செலவழித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சியில் கணக்கு தணிக்கை நடந்தபோது, ரூ.40 லட்சம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வங்கியில் விசாரித்தபோது, கணக்கை ஆய்வு செய்த அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பணம் குணசேகரன் என்பவரின் கணக்கில் சேர்ந்திருப்பது தெரியவந்தது.  இந்நிலையில், குணசேகரனின் வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது, தனது வங்கி கணக்கில் 40 லட்சம் ரூபாய் வந்தது என்றும் யாராவது கேட்பார்கள் அதைக் கொடுத்து விடலாம் என நினைத்திருந்தேன்.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக யாரும் கேட்கவில்லை. எனவே அந்தத் தொகையை எடுத்து செலவழித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.
“பணத்தை செலவழித்து விட்டேன், பின்னர் தருகிறேன்” என்று சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்த, போன வங்கி அதிகாரிகள் திருப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இது குறித்து புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து காலல்துறையினர் குணசேகரன் மீது (அடுத்தவர் பணம் என்று தெரிந்தும் செலவு செய்தல் என்னும் குற்றப்பிரிபு 403 ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அவர் அந்தத் தொகையை திருப்பி தராததால், தவறுதலாக பதிவுசெய்த அந்த வங்கியே அந்த தொகையை மாநகராட்சியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
ஏஜண்ட் அவர்க்கு தொியாத அது அடுத்தவரின் பணம் என்று. சட்டப்படி அடுத்தவர் பணம் என்று தெரிந்தும் அதை வங்கிக்கு தெரியப்படுத்தாமல் தாமே செலவு செய்தால் அது குற்றம் அதன்படி காவல் துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.