அரசியலுக்கு வரும் நடிகை நமீதா
![namitha-new-movie-opening-pics025[1]](http://www.tamil.indiabeeps.com/wp-content/uploads/2015/09/namitha-new-movie-opening-pics0251.jpg)
விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாகவும், நல்ல மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்வேன் என்றும் நடிகை நமீதா கூறியுள்ளார். மேலும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வர விரும்புவதாக கூறியுள்ளார்.
அதிக சதை போட்டதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நமீதா, தனது உடல் எடையை அதிரடியாக சுமார் 18 கிலோ குறைத்துள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று, நான்கு மொழிகளில் நடித்துவிட்டேன். தமிழில் வெளிவந்த, இளைஞன் படத்துக்கு பிறகு நான் எந்த படித்திலும் நடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு வராமல் இருந்ததற்கு காரணம் என் உடல் எடை கூடியதுதான். தற்போது என் உடல் எடையை 18 கிலோ வரை குறைத்துவிட்டேன். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது. மக்கள் சேவைக்காகவே நான் அரசியலுக்கு வர விரும்புகிறேன். எனக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும் அழைப்பு வந்துள்ளது. அவை எந்த கட்சிகள் என்பதை இப்போது கூறஇயலாது. திருமணத்தை பொறுத்த வரையில், நல்ல மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்வேன்.
இவ்வாறு நமீதா கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.