கருப்புதான் பிரச்சினையா கவலையை விடுங்க-கலராவது எப்படி

tamil girls

தமிழனாலும் அவன் மற்ற மாநிலத்தவனாலும் சரிஒரே கவலை இந்த கலருதான் இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே சொல்வாங்க.  ஆாியர்கள் தான் நம் இந்தியாவில் உள்ளே முதலில் வந்தவர்கள்.  அதற்கு முன்பெல்லாம் திராவிடர்கள் மட்டும் தான் நம் நாட்டில் வாழ்ந்தார்கள்.  ஆப்பிரிக்ககண்டத்தோடு இந்தியா இணைந்திருந்த காலத்தில் ( அதாங்க லெமூாியா கண்டம்) ஆப்பிரிக்க மக்களும் நம் மக்களும் சகோதர சகோதாிகளாக இருந்தோம்.  அப்போ அவங்க நிறம் கருப்பு நம் நிறம் என்ன அதுவும் கருப்புதான்.

ஆனால் காலநிலைவேறுபாடு மற்றும் இயற்கை சீற்றங்களால் நமக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரமாச்சு அப்பறம் நம்ம நாட்டுக்குள்ள புகுந்த ஆாியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மள அவங்க கலாச்சாரத்துக்கு மாத்துனாங்க.  அவங்களில் சில பேரு நம்ம கூட சம்மந்தாமாயிட்டாங்க இதெல்லாம் நடக்கறதுக்கு 2000 வருடங்களாச்சு.

இப்பப் புாியுதா கருப்பின் மகத்துவம்.  இதுதான் திராவிடரின் நிறம். எந்த ஆப்பிரிக்கனும் சிவப்பாக இல்லை ஆனால் இந்தியாவில் மட்டும் எப்படி? மேற்கண்டவாறு ஆயிற்று…

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. பசங்க கூட பிளாக் இஸ் மை பேவரைட் னு போயிடுவாங்க ஆனால் தங்கச்சிங்களுக்கு ஒரே கவலைதான் அதை ஒரு தாழ்வு மனப்பான்மையாக நினைச்சு படைச்ச கடவுளை திட்டியே தீர்த்துடுவாங்க.  தனிமையா நினைச்சுப்பாங்க.

மேலும் அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. பார்லர் போனால் மட்டும் எல்லாம் கலராகிவிடமாட்டோம்.

பெயின்ட் அடிச்சாலே தவிர வேறு எப்படியும் கலராக்கிவிட மாட்டார்கள் பார்லரில் காசும் கரையும் உண்மையை தொிந்துக்கொள்ளுங்கள்.  ஏன் நம்மில் சிலபேரு கருப்பாக இருக்கின்றோம்.

நம் தோலில் மெலனின் என்ற செல்கள் உள்ளன.  இதோட வேலை தோல் நல்ல ஈரப்பததோட காய்ந்துப்போகாமல் எதிர்ப்புச் சக்தியோட இருக்கிறதுக்காக உதவி செய்கின்ற மெலனின் சுரப்பிறய சுரக்கின்றது… தூக்கி எழுந்துப்பார்த்தா முகத்தில எண்ணெய் வழிந்தது போல் இருக்குமே அதான்.  பெரும்பாலும் கருப்பா இருக்கிறவங்களுக்கு தான் எண்ணெய் வடியும். சிகப்பா இருக்கிறவங்களுக்கு வறண்டு போய் இருக்கும்.

melonin

 

இந்த மெலனின் செல்கள் கருப்பு நிறமுடையவை.  அவைகள் அதிகமாக இருந்தால் அந்தப்பகுதி கருப்பாக இருக்கும். குறைவாக இருந்தால் அப்பகுதி சிகப்பாக இருக்கும். பொதுவாக வெயில் பட்டவுடன் இந்த செல்கள் அதிகமாக காணப்படும்.  வெயில் படவில்லையென்றால் குறைந்துவிடும். அதான் சொல்வாங்க வெயில் அலைஞ்சா கருத்துப்போயிடுவீங்கன்னு.

இந்தச் செல்களோட சுரப்புத்தன்மையை குறைச்சோம்னா நம்ம சிகப்பாயிடுவோம். அதுகாக்க நிறைய கிரீம் கள் இருக்கின்றன.  அதேசமயம் மூலிகைப்பொடிகளும் இருக்கின்றன.  இப்போது தொிகின்றதா சிவப்பா இருக்கின்றதன் ரகசியம்.

ஆனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் எவ்வளவு முயன்றாலும் உங்களால் மெலனின் சுரப்பியை முற்றிலும் நீக்க முடியாது.  அது உடலில் ஒன்றிப்போனது.  பரம்பரையாக வந்தது.  முற்றிலும் சிலருக்கு சுரக்காது அவங்க ரொம்ப வெள்ளையா இருப்பாங்க ஆனால் அவங்கள பார்க்க கூட மாட்டீங்க அதை வெண்குஷ்டம்னு சொல்வோம்.

சரி இவ்ளோ தொிஞ்சுகிட்டீங்க அட்லீஸ்ட் நான் தமன்னா மாதிரி வெள்ளையா இல்லினாலும் லட்சுமி மேனன் மாதிரி கலராவது இருக்கனும்னு நல்ல மனசுடையவங்க இதுல இருக்கின்றவற்றை குறைஞ்சது ஆறு மாதங்கள் செய்யுங்க அப்பறம் பாருங்க ”டல் திவ்யானு கூப்பிட்டவங்க தூள் திவ்யானு கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க”.

1. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

2.  2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

3. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும். சந்தனம் வாங்க முடியாது என்பவர்கள் சந்தூர், மைசூர் சான்டல் சோப்புக்கு மாறிடுங்க.

4.  கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

5. சோப்பு தேய்த்து குளித்தப்பின்னாடி பாசிப்பயறு மற்றும் கடலைமாவு போன்றவற்றினை நன்றாக தண்ணீரில் கலந்து உடலில் பூசிவிட்டு 5 நிமிடம் காயவைத்துவிட்டு பின்னாடி குளிச்சுடுங்க.  முன்னாடியெல்லாம் சோப் விளம்பரம் ஒன்றில் சிம்ரன் சொல்வாங்கள்ள 27 முறை குளிச்சேன்னு.  அந்த மாதிரி ஆயிடுவீங்க.

6. முடிஞ்சா எருமைத்தயிர் அல்லது சாதா தயிரை உடலில் பூசி காயவிட்டு குளித்தாலும் மெலனின் சுரப்பது கட்டுப்படும்.

7. சரி இதல்லாம் எனக்கு வேண்டாம்ங்க ஸ்மார்ட்டான ஐடியா கொடுங்கன்னீங்கனா ஒரே வழி அது தியானம் ஒன்றுதான்.  ஒரு அரைமணி நேரம் விடியற்காலையில் எழுந்து செய்தீர்கள் என்றால் வசீகரம், அழகு, அன்பு, இறைசக்தி எல்லாம் கிடைக்கும்.  காலையில் 5.00 மணி வாக்கில் எழுந்து முகம் மற்றும் பற்களை சுத்தம் செய்துவிட்டு பின் அமைதியாக அறையில் சாதரணமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு பிடித்த இறைவன்  (எம்மதமானாலும்) நினைத்து வேண்டியவற்றை கேட்டுக்கொண்டு அமைதியாக மூச்சை விடவும்.  பின் வேக வேகமாக மூச்சினை மேலும் கீழும் என் 25 தடவை செய்யவும் பின் மெதுவாகமூச்சினை விடவும்.  இப்போது மழைப் பெய்து ஒய்ந்தது போன்று மனதில் அமைதி தோன்றும்.  கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மூச்சை இழுக்கவும் பின் விடவும்.  10 முறை செய்தபின்.  இப்போது இடது மூக்கில் மூச்சை இழுக்கும் போது ஆசனவாயை இறுக்கவும் 5 நொடி கழத்து வலது மூக்கில் மூச்சை வெளியேற்றும் போது ஆசனவாயை தளா்த்தவும்.  இது போல் தொடர்ந்து 30 தடவை செய்யுங்கள் அதற்கு மேல் வேண்டாம்.  நாளாக நாளாக மூச்சை நிறுத்தும் காலத்தை நொடிக்கணக்கில் உயர்த்தவும்.  பாருங்கள் 48 நாட்களிலேயே ஒளிரக்கூடிய உடலைப் பெறுவீர்கள்.  பின் மற்றவர்களிம் சொல்வீர்கள் அவர்கள் உங்களை நம்புவார்கள் ஏனென்றால் சிகப்பாக இருக்கின்றவர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

குறிப்பு: எக்காரணம் கொண்டும் மீன்குழம்பு மற்றும் கறிக்குழம்பு சாப்பிட்டபின் தயிரைக் கலந்து சாப்பிடாதீர்கள்.  அப்பறம் நல்லா USA கலருல மாறிடுவீங்க. வெண்குஷ்டம் வந்துடும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.