கொவ்வைப்பழ உதடு

dry-lips

எவ்வளவு தான் சிகப்பாக இருந்தாலும் ஒரு சிலருக்கு உதடுகள் மட்டும் கருப்பாகவே இருக்கும்.

வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

அதேசமயம் பின்வருங்காரணங்களால் நன்றாக இருந்த உதடுகள் கூட  கருப்பாக மாறிவிடும்

1. ஆண்கள் சிகரெட் பழக்கமுள்ளவர்கள் மற்றும் பீடி பழக்கமுள்ளவர்கள் தங்கள் உதடுகளை பாழாக்கிக் கொள்கின்றனர். அறவே நிறுத்த முடியாதவர்கள் முடிந்த வரை உதடு ஒட்டும் அளவிற்கு பிடிக்கவேண்டாம்.

2. பெண்கள் நன்றாக இருந்த போதும் உதட்டில் லிப்ஸ்டிக் சாயத்தை பூசிக் கொண்டு இயற்கை நிறத்தை வீணடிக்கின்றனர்.   தேங்காய் எண்ணையை உதட்டில் பூசிக்கொண்டு பின் லிப்ஸ்டிக் போடுவதால் உதடு கருப்பாவது தடுக்கப்படும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.