சிறுநீரகக் கற்களா கவலையை விடுங்க

download (11)

பொதுவாக எல்லா ஆண் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சினைதான் இது. இந்த சிறுநீரக்கல் என்பது சிறியது தான் ஆனால் பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். ஆரம்பத்திலேயே இவற்றைக் கவனிக்க வேண்டும் இல்லையெனில் ஆப்பரேஷன் வரை கொண்டு போயிடும்.

சிறுநீரகக்கற்கள் பெரும்பாலும் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தான் ஏற்படுகின்றன.  ஓடியாடி வேலை செய்கின்றவர்களுக்கு வருவதில்லை.  காரணம் உட்கார்ந்த இடத்தில் வேலைசெய்யும் போது நமது உடல் இயக்கமற்ற நிலையில் உள்ளது.  இதனால் சாிவர சிறுநீரகம் இயங்காமல் போய்விடுகின்றன. அதேசமயம் அதிக உப்புகள் வெளிவராமல் நின்றுவிடுகின்றன. தங்கி தங்கியே பெரிய உப்புப்படிவத்தை கொடுக்கின்றன.

 

அறிகுறிகள்

1. தீராத ஒற்றைப் பக்க இடுப்பு வலி.

2. அடிக்கடி சூடு பிடித்தல்.

3. சிறுநீரின் மஞ்சள் நிறம்.

4.சிறுநீர் குழாயில் எரிச்சல் மற்றும் தீராத வலி.

5.சிறுநீர் கழிக்கும் போது இடையில் நின்று விடும்.

 

காரணங்கள்

1. தக்காளி சாதம், மற்றும் தக்காளி சார்ந்த உணவுகளை அதிகம் உண்பது.

2. உடல் இயக்கமின்றி இருப்பது.

3. உப்புத்தண்ணீர் குடிப்பது மற்றும் தண்ணீரை அதிகமாக குடிக்காமல் இருப்பது.

4. நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது.

 

தீர்வுகள்

 

1. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

2. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

3. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

4. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை. பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

5. திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

7. புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

8. கண்டிப்பாக 10 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்து உடல் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.