காய்கறி வாங்கப்போறிங்களா தம்பி

veg purchase

பொதுவாக காய்கறிகள் வாங்கும்  போதிய திறமை வேணும்ங்க இல்லினா விலை அதிகமாக கொடுத்தும் முத்தலும் தொத்தலும் வீட்டுக்கு வரும்.  இப்ப இருக்குற பிள்ளைங்களுக்கு எதுவும் தெரியாதுங்க பாவம் அவங்களுக்கு கம்ப்யூட்டரும் செல்போனும் பற்றி தான் தெரியும். அப்பறம் பேச்சுலர்ஸ்க்கு தான் இது ரொம்ப முக்கியம்.  கை நிறைய சம்பாதிக்கிறோம் காய்கறிக்கு செலவு பண்றதுல்ல எந்த நஷ்டமும் இல்லை என நினைக்கின்றவர்களுக்கு தான் என் அனுபவங்கள் இது எங்கம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது உங்களுக்கு உதவட்டுமேன்னு பதிவpடறேன் எல்லாருக்கும் ஷேர் செய்யுங்க.

பொதுவாக காய்கறிகளை காலைநேரத்துல வாங்கப்போகாதீங்க ஏன்னா காலையில நல்லா பிரஷ்ஷான காய்கறிகளை கொண்டு வந்து வச்சிருப்பாங்க என நினைத்து காசை அதிகமாக கொடுத்து வாங்காதீங்க.  பொதுவாக நேற்றைய காய்கறிகளைத்தான் மிச்சமாவதை மீண்டும் வாடுவதற்குள் காலையில் விற்றுவிடுவார்கள்.

காய்கறிகளை பொதுவாக மதியவேளை அல்லது மாலைவேலையில் வாங்குங்கள் தினமும் வாங்குபவரிடம் மட்டுமே வாங்குங்கள் உங்களுக்கு பழக்கமானவர்களாக  ஆகிவிடுவார்கள் அப்பறம் விலைச்சலுகைகள் மற்றும் காய்கறிகளைப் பற்றி உண்மைநிலவரம் தெரியும்.  மாதச்சம்பளக்காரர்கள் பாவம் தயவு செய்து சூப்பர்மார்க்கெட்டில் காய் வாங்கி விடாதீர்கள்.  பட்ஜெட்டில் துண்டு தான் விழும். காய்கறிகளை மாலை வேளைகளில் கூடைக்காரர்களிடம் வாங்குவதால் அவர்கள் எப்படியாவது விற்றுவிட்டுதான் வீட்டுக்கு செல்லவேண்டும் என்ற நிபந்தனையில் இருப்பர் இதனால் நம்மால் முடிந்தவரை காசு குறைவாக கேட்டு காய்வாங்கலாம்.

1. வாழை தண்டு:

மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறியதாக இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்:

நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும். பொதுவாக தோல்கள் மூடி காய்ந்து இருந்தால் அது பழைய வெங்காயம்.

3. முருங்கைக்காய் :

முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைகாய்.  சில மரத்துக்காய்கள் முற்றிப்போய் இருந்தாலும் அதன் சோற்றுப்பகுதி மென்மையாக இருக்கும் நாட்டு முருங்கைக்காய்கள் குறைந்தபட்சம் 30 செமீ நீளமாக இருக்கும். முருங்கைக்காயை அாியும் போதே வாசம் வரும்.

4. சர்க்கரை வள்ளிகிழங்கு:

உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும். துளி மண்ணாவது ஒட்டியிருக்கும் அது புதுக்கிழங்கு பொதுவாக நன்றாக கழுவிதான் சந்தைக்கு வலு

5. மக்கா சோளம்:

இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருப்பது மற்றும் ரொம்ப முற்றிப்போனால் குக்கரில் வைத்து அவித்தால் பிரச்சினைகள் இல்லை.

6.தக்காளி:

கவனமாக இருக்கவேண்டியது இந்த தக்காளி விசயத்தில் தான் உடனே அழுகிவிடக்கூடிய காய்கறிளில் தக்காளியும் ஒன்று.  நாட்டு தக்காளிகளை நல்ல சிவப்பு நிறத்தில் பார்த்து வாங்க வேண்டும்.  ஆனால் பெங்களுர் தக்காளியை செங்காய் பதத்தில் வாங்கிக் கொண்டால் அடுத்த ஞாயிறு வரைக்கும் கெடாமல் இருக்கும்.

8. சின்ன வெங்காயம்:

பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.  வெங்காயத்தில் தொழும்பு நீக்கி இருந

9. குடை மிளகாய் :

தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.

10. காலிபிளவர்:

பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும். பெரும்பாலும் அனைத்து காலிபிளவர்களும் வெந்நீரில் வேகவைத்தப்பின் தான் சமைக்கவேண்டும் ஏனென்றால் சிறு புழுக்கள் நிறைய இருக்கும்.

11. மாங்காய்-

தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய்

( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது. பாம்பேறிய காய் கசக்கும் சிறிது தின்றுபார்க்கவும்.

13. பரங்கிக்காய்

கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் :

கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு:

முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு:

முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு :

முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம்

மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி:

லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்:

தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் :

நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு:

பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ்

பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை:

தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்:

பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ :

மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :

கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ :

வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்.

29. முள்ளங்கி:

லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்.
30. வெள்ளரி

மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :

நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.ஒருமுறை அறிந்ததும் அறியாததும் பக்கத்திற்கு வந்து பாருங்கள்…

 

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.