ஏ.ஆர். ரகுமான் ஹிந்து மதத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும்: விசுவ ஹிந்து பரிஷத்

ar-rahman-dc-0306_0_0_0_0_0[1]

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஹிந்து மதத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தில்லியில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புனிதர் முகமது என்ற திரைப்படத்திற்கு, ரகுமான் இசையமைத்ததற்காக அவர் மீது ஃபத்வா பிறப்பிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. உடனே ஹிந்து மதத்துக்கு ஏ.ஆர். ரகுமான் திரும்ப வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணமாகும். அவர் மீண்டும் ஹிந்து மதத்துக்கு திரும்பினால், அவரை இந்துக்கள் வரவேற்பார்கள். தனது மகனுக்காக ஹிந்து மதம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்றார் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின்.

திலீப் குமார் என்று இயர்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரகுமான், இஸ்லாம் எனக்கு மன அமைதியை தருகிறது என்று கூறி, 1989-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.