இந்திய வாட்ஸ் அப் சிறப்புகள்

whats app

பொதுவாக இந்தியர்கள் எப்போதும் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் பங்கேற்பர். ஏனென்றால் நம் நாட்டு மக்கள் தொகையும் அதிகம் அதேசமயம் படித்தவர்களும் அதிகம்.  அதனால் எந்த வொரு புதிய தொழில்நுட்பத்தையும் நம்மவர்கள் பயன்படுத்திவிடுகின்றனர்.  விண்டோஸ் xp  ன் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு முக்கியமாக உள்ளது என பில்கேட்ஸ் கூறியுள்ளார். அதேபோல் வாட்ஸ் அப்-ன் அப்ளிகேசன்கள் இந்தியாவில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே வாட்ஸ் அப் -நிறுவனம் இந்தியர்களுக்கென புதிய சிறப்பம்சங்களை தங்களது வாட்ஸ் அப் பேக்கேஜில் இணைத்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியின் அதிவேக வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளதாகவும் என தகவல் வெளிவந்தது.

வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.
இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.
முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.