வண்ண உணவுகள்-புற்றுநோய் நிவாரணி

red fruit

பழங்காலத்தில் பழங்களின் மூலம் நல்ல வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இப்போது புற்றுநோய்கள் என்பது எளிதில் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாக மாறிவிட்டது. ஆனால் இந்த வண்ண உணவுகள் சாப்பிட்டுக்கொண்டே வருவதால் புற்றுநோயை எளிதில் கரைத்துவிடலாம்.

அதிசய சிவப்பு : தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

A + B + C ….. ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் :

1. புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

2. கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3. நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

5. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

6. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.

7. கண் மற்றும் பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

8. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

9. உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

10. முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

11. சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

12. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

13. காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது

காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1

இந்த மூன்று பழங்களையும் சாியான அளவு எடுத்துக்கொண்டப்பின் அதனுடன் வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றினை பிழிந்துக்கொள்ளலாம் பின் மூன்றையும் சேர்த்து ஜூசரில் வைத்து நன்றாக அரைத்தெடுத்தப்பின் வேண்டுமளவு இனிப்பை எடுத்துக்கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருக வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.
தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீடோ என்பவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவிய பின்னரே அரைக்கவும்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.