புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்

camel
புற்றுநோயைக்குணப்படுத்த உலகில் மருந்துகண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அதேபோல் அரபு நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் ஒட்டகத்தின் பால் மற்றும் அதன் சிறுநீர்களில் இருந்து புற்றுநோய்க்கிருமிகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்தினைக்கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக எலிக்கு செலுத்தி வந்தனர் . எலி உடலில்/ இருந்த புற்றுநோய்செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து உடலில் நோய்-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இது புற்றுநோய் செல்களை அளித்து-விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே மனிதர்களுக்கும் இந்த-மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி நிறுவனம் ஒட்டகப் பாலில் இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது. “இப்போது சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ் கிரீம்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்’ என்று அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.
இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரைவியாதிக்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்தாகும்

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.