கூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்

download (18)

உங்கள் கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம்.

1. சாதாரண கூந்தல்(Normal hair)
2. வறண்ட கூந்தல்(dry hair)
3. எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்(oil hair)
4. பலவீனமான கூந்தல்(weak hair)

சாதாரண கூந்தல் (normal hair)

நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது .

வறண்ட கூந்தல் (dry hair)

இத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும் .

எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair )

கூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகி முடி கொட்டல் ஏற்படும்.

பலவீனமான கூந்தல் (weak hair)

நமது தவறான அணுகுமுறைகளினால் மட்டுமே பலவீனமான கூந்தல் உண்டாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

1. அடிக்கடி உப்புத்தண்ணீரில் குளிப்பது.
2. தலைமுடிக்கு அடிக்கடி பிளீச் செய்வது
3. தலைமுடிக்கு அடிக்கடி சாயம் போடுதல் (colouring)

நெடுநேரம் வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் பலவீனமான கூந்தல் உண்டாகிறது.

பலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள் :

1. பலவீனமான கூந்தலை உடையவர்கள் ஈர்த்தலையில் அல்லது எண்ணெய் பூசியவுடன் தலையை வாரக்கூடாது .
2. இரசாயனக் கலவை கொண்ட ஷாம்புகளைவிட, இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளில் தயாரிக்கப்படும் சீயக்காய் அல்லது ஷாம்புகளை உபயோகியுங்கள் .
3. சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் வறட்சித் தன்மை இல்லாதிருக்கும் .
4. கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர்க்கால்களையும் கவனம் கொண்டு விரல் நுனிகளால் சுத்தம் செய்ய வேண்டும் .
5. மாதத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வதால் பலவீனமான கூந்தல் பலமான கூந்தலாகும்.
6. தலையில் மசாஜ் செய்ய கேரட் சாறு மிகவும் நல்ல பலனைத்தரும்.
7. அதிக சூடுள்ள நீரில் குளிக்கக்கூடாது.
8. கூந்தலை டவலால் அடித்து காய வைக்கக்கூடாது.
9. பலகீனமான கூந்தலில் வெடிப்பு ஏற்பட்டு, முடிகொட்டுதல் உண்டானால், தேங்காய்ப் பாலை தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் முடி கொட்டுதல் நீங்கும் .
10. பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு முடிகொட்டுதல் உடல் பலவீனத்தாலேயே என்பதை உணர்ந்து, சத்தான ஆகாரங்களை உண்டு கூந்தல் பலவீனத்தை சரிபடுத்திக்கொள்ள வேண்டும் .

கூந்தல் மசாஜ்

1. மயிர்க்கால்களில் (scalp) விரல் நுனிகளைக் கொண்டு நன்கு அழுத்தி தலைமுழுவதையும் தேய்க்க வேண்டும் .
2. கூந்தலை வரிவரியாகப் பிரித்து, பஞ்சில் எண்ணெய்யை நனைத்து, மயிர்க்கால்கள் முழுவது நன்கு தேய்க்க வேண்டும்.
3. மசாஜ் செய்யும்பொழுது தலையின் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாய் செய்வது சிறந்த பலனைத் தரும்.
4. கப்பிங் முறையில் விரல்களை ஒன்றாக இணைத்து, குவித்து தலை முழுவதும் தட்டிவிட வேண்டும் .
5. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து, சுண்டுவிரலால் டேப்பிங் முறையில் மெதுவாக தலையில் தட்டி விடவேண்டும் .
6. விரல்நுனிகளை மயிர்க்கால்களில் வைத்து லேசாகக் கிள்ளுவதுபோல் பின்சிஸ் முறையில் தலைமுழுவதும் மசாஜ் செய்தல் வேண்டும்.

கூந்தலைப் பராமரிக்க ஆவிப்பிடித்தல்(steaming)

மசாஜ் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்யப்பட வேண்டும் . பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்க வேண்டும் . அதில் ஒரு பெரிய துண்டினை நனைத்து, பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையில் சுற்றிட வேண்டும் . இதேபோல் நான்கு முறை செய்ய வேண்டும் .

ஆவி பிடித்த பின் ,தலைக்கு மூலிகை பூச்சு செய்தால் மிகவும் நல்லது .

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.