இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

images (15)

துளசி:-

  • 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி          முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:-

  • 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
  • 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது.

அருகம்புல்:-

  • 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.
  • 2. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.
  • 3. கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.
  • 4. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.
  • 5. தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும்.
  • 6. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.

அரச இலை:-

  • 1. ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.
  • 2. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது.
  • 3. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.

பூவரசு:-

  • 1. நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம்.
  • 2. சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.

கல்யாணமுருங்கை (முள் முருங்கை):-

  • 1. அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும்.
  • 2. நீர் பிடிப்பும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும்.
  • 3. நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:-

  • 1. சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது.
  • 2. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.
  • 3. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).
  • 4. சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி:-

  • 1. இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும்.
  • 2. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:-

  • நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:-

  • நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கற்பூர வல்லி (ஓமவல்லி):-

  • 1. மிகச் சிறந்த இருமல் மருந்து.
  • 2. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
  • 3. புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.

வல்லாரை:-

  • 1. நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

கண்டங்கத்திரி:-

  • காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:-

  • 1. நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது.
  • 2. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
  • 3. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

மஞ்சள் கரிசாலங்கண்ணி:-

  • காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

செம்பருத்தி:-

  • 1. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது.
  • 2. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது.
  • 3. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளி கீரை:-

  • 1. இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது.
  • 2. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது.
  • 3.காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.

தும்பை:-

  • 1. பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது.
  • 2. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும்.
  • 3. தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

வெங்காயமும் பூண்டும்:-

  • 1. கிறுமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும்.
  • 2. கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.

குப்பைமேனி:-

  • 1. ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது.
  • 2. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும்.
  • 3. எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம்.
  • 4. சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும்.
  • 5. வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.