முள்ளங்கியின் மகத்துவங்கள்

mullangi-maruthuva-payangal

முள்ளங்கி என்ற காய்கறி பெயரைக்கேட்டாலே அதன் பருப்புக்குழம்பு தான் ஞாபகம் வரும். முருங்கைகாய் சாம்பார் எவ்வளவு ருசியானதோ அதேபோல் முள்ளங்கியைப்பயன்படுத்தி வைக்கப்படும் பருப்புச் சாம்பார் ருசியானது.  ஆனால் இப்போது யாருக்கும் முள்ளங்கி வாங்கி அதை சொரிந்து அாிந்து பின் அதன் மேல் உள்ள வாடைப்போக வதக்கி பின் குழம்பில் போட நேரமிருப்பதில்லை.பிறகு வயிற்றில் பிரச்சனை, சிறுநீரக்கத்தில் கல் என தினந்தினம் மாத்திரைகளை சாப்பிடும் நிலை தான் ஏற்படுகிறது.

ஆனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ஒரே வழி காய்கறிகள் தான், அதிலும் முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்.
முள்ளங்கியில் இரண்டு வகை உண்டு.
1.சிவப்பு முள்ளங்கி
2.வெள்ளை முள்ளங்கி.
இதில் சிகப்பு முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.
வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. மேலும் சுவைக்காக சேர்க்கப்படுவது.
முள்ளங்கியின் மகத்துவங்கள்
முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.
சிறுநீரக்கத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
முடி உதிர்வதைத் தடுத்து, நன்கு வளர்ச்சியடைய உதவும்.
இரைப்பை வலி, வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும், குரல் இனிமையாகும்.
முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.