கல்யாண முருங்கை-ஆஸ்துமா நிவாரணி

download (23)

கல்யாணமுருங்கைகளை ரோட்டோரத்தில் இருபக்கமும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. சிகப்புநிறப் பூக்களை உடைய அந்த மரம் மிகுந்த பயன்களை உடையது.

தலைவலி, வயிற்று வலிக்கும் மருத்துவரை நாடி செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் நம் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுவதில் கல்யாண முருங்கை சிறந்த மருந்தாகும்.

கல்யாண முருங்கை வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிளகுக் கொடிகளுக்கிடையேயும், காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காகவும் இதனை வளப்பார்கள்.

 

கல்யாண முருங்கையின் மகத்துவங்கள்

கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குடல் பூச்சிகள் அழிந்துவிடும்.

கல்யாண முருங்கை இலைச்சாறு 500மி.லியில் 600கிராம் சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் 4 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

கை பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து சாறு பிழிந்து 1 டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் பசி எடுக்கும்.

இலையைப் பொடியாக நறுக்கி ஊறவைத்து புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து வெங்காயத்தையும் போட்டு பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் வேகவைத்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய் குறையும்.

கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால், மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்காது.

இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட்டால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைகளை வதக்கி மூட்டு மேல் கட்‌டி வந்தால் மூட்டு வலி குறையும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.