Memmory Card வாங்கப்போறிங்களா இதப்படிங்க

DupliMemory_card

மெம்மாி கார்டுங்குறது முதல்ல நாம் கேள்விப்பட்டது கேமிராவில தான் அதுல நாம் போட்டோ மற்றும் வீடியோவை ஸ்டோர் செய்வதற்காக பயன்படுத்தினோம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஐபாட் மற்றும் எம்பி3 பிளேயர் போன்றவற்றில் வந்து பின் செல்போனில் கேமிராவும் பிளேயரும் வந்தவுடன் அதில் பயன்படுத்தப்படுகின்றது.

சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது.  இப்போது சில போன்களில் இன்டர்நல் மெம்மாி கார்டு வந்துவிட்டது.

சரி மெம்மரி கார்டு வாங்கப்போலாம் வாங்க நல்ல கடையா பார்த்து.   இப்போ எல்லாம் 2, 4, 8, 16, 32 ஜிபி அளவுகளில் அவைகள் கிடைக்கின்றது. அதன் அளவுகளுக்கு ஏற்றவாறு அதன் விலையும் இருக்கும், ஆனால் ஒரு கடையில் 4GB மெமரிகார்ட் 500 என்றால் மற்றொரு கடையில் 700 என்பார்கள்.

இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? விலை கம்மியா கிடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள், ஏனென்றால் மாறிவரும் தொழில்நுட்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் தானே. மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும்.

இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது.

அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும். உதாரணமாக 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

அதே போல் class 6 – 6MB per second, Class 8 – 8MB per second, Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது.

அடுத்தமுறை மெம்மரி கார்டு வாங்கும் போது செக் பண்ணிட்டு வாங்குங்க காசு நம்முடையதுங்க.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.