சூம்பிப்போன உடம்புக்கு சூப்பு தான் ஒரே கதி!

ஆட்டுக்கால் சால்னா

இந்த உடம்புக்கு என்ன வந்துடுமோ தெரியல… திடீர் திடீர்-னு ஏதாவது வந்துத் தொலையுது…என்று சளி(ப்பிடித்தவர்கள்)ச்சுக்குவறங்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப்பைப் பற்றி சொல்லப் போறேன்.

பொதுவாக சூப் என்பது ஆட்டுக்கால் எலும்புப்பகுதியில் உள்ள மஜ்ஜைப் பகுதிகளில் உள்ள சதைகள் தான் ஆகும்.  இது உடலுக்கு சக்தி மிகுந்தது. அதனால் தான் இதைப்பயன்படுத்துகின்றோம்.   நெடுநாளாக தள்ளாடுகின்ற கிழவருக்கும் இதைக் கொடுத்தோமானால் உடனே எழுந்து விடுவார்களாம்.
வேண்டிய பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
இஞ்சி பூண்டு நசுக்கியது – சிறிதளவு
மிளகு – கொஞ்சம்
சீரகம் – கொஞ்சம்
மல்லி – சிறிது
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 1
மல்லித்தூள்- சிறிது
மஞ்சள்தூள் – சிறிது
பட்டை கிராம்பு சோம்பு – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தூவ
காலை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் தனியா இவைகளைப் போடவும்
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்
கழுவிய ஆட்டுக்காலை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
மல்லித்தூள் மிளகாய், மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து விடவும்.
அடுப்பு சிம்மில் இருந்தால் போதும் ஒரு அரைமணி நேரம் நன்றாக கால் வேகும் வரை வைத்து இருக்கவும்.தண்ணீரும் சிறிதளவு குறைந்து விடும்.உப்பின் சுவை அதிகமானால் நீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.பின் மல்லித்தழை தூவிவிடவும்.
சுவையான சூப் ரெடி..
கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் மிளகுத்தூளையும் தூவி சாப்பிட்டால் கண்டிப்பாய் ஒரு வித விக்கல் வரும்.அதுதான் சூப்பின் சுவைக்கு கிடைத்த வெற்றி…

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.