உயிர்ச்சத்து குறையிருந்தா உயிரே போயிடும் !

உண்மைதாங்க, பிறந்தவுடன் தாயிடம் கி்டைக்கும் பாலைத்தவிர அதுக்குப்பின்னாடி சாப்பிடுகின்ற எந்த உணவிலும் விட்டமின் சாியாக கிடைப்பதில்லை.  இதனால் குறைபாடு அதிகமாகி அதிகமாகி கடைசியில் நோயாக மாறுகின்றது.  அதனால் எல்லாத்தையும் பாலு, மீனு. முட்டைக்கறினு திங்கச்சொல்லல… அதுக்கு ஈடாக நிறைய உணவுகள் சைவத்துல இருக்குங்க வசதியில்லாதவங்க சாப்பிடுங்க வசதியிருக்குறவங்க தொிஞ்சுக்குங்க…:}

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

தினமும் பச்சைப்பயிறை ஊற வைத்து ராத்திரி தூங்கும் போது துணியில் கட்டி வைத்துவிட்டால் அடுத்த நாளு முளை விட்டுருக்கும் அதே அப்படியே பல்லைக் கொப்பளிச்சுட்டு சாப்பட்டா உயிர்ச்சத்து கிடைக்கும்.. இதனால் முடி நல்லா வளரும் கண்ணு தெளிவா தொியும்.

அயிரைப்பார்த்திருக்கீங்களா? மனுசாள் மீனு முட்டையை கண்ணுல கூட கண்டுருக்கமாட்டார்.  அப்பறம் எப்படிங்க பிள்ளையாரு மாதிரி இருக்காங்க.  கொண்டைக்கடலை தாங்க.  என்னைக்கோ விநாயகருக்கு படைக்கிறப்போ நம்ம தின்னுண்டு வீட்டை நாஸ்தி பண்ணிண்டு இருப்போமே அந்த கொண்டைக்கள்ளைளை அப்படியே ஊற வச்சு வேக வைக்காம பச்சையாக தின்னுட்டுவந்தா போதும்.  அப்படியே அவ்ளோ நல்லது.

உளுந்து அம்மா இட்லிக்கு மாவாட்டும்போது உளுந்தைத் தனியா ஆட்டும் அப்போது ஒரு டம்ளர் மொண்டு அதுல சர்க்கரையை கலக்கி ஸ்பூனைப் போட்டு சாப்பிடுனு தருவாங்க… சத்தியமா சொல்றேங்க எலும்புக்கு உறுதியே இந்த உளுந்து தாங்க.  இதையும் ஊற வச்சு சர்க்கரை இல்லினா வெல்லத்தோட கலந்து சாப்பிடலாங்க.  இல்லினா உளுத்தங்கஞ்சி சாப்பிடுங்க.

இப்போ சொன்ன இந்த முணையும் 48 நாள் காலையில வெறும் வயித்தில தின்னுங்க.  அப்பறம் பாருங்க.:)

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.