கம்ப்யூட்டரை பராமரிக்க 8 விதமாக கம்ப்யூட்டர் டிப்ஸ்கள்

.

1. முதலில் கம்ப்யூட்டர் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதில் என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். உங்கள் கணினியை பற்றி அறிந்துகொள்ள கம்ப்யூட்டர் என்றால் என்ன? பதிவை அவசியம் வாசிக்கவும். இந்த இடுகையை வாசித்த பிறகு கண்டிப்பாக உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும்.

2. மனிதனுக்கு மூளை எவ்வளவு அவசியமோ அதுபோல அது இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமான Operating System முக்கியம். கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வதுதான் ஆபரேட்டிங் சிஸ்டம். இதைப்பற்றி தெரிந்துகொள்ள கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற இந்த பதிவை வாசிக்கவும். இந்த பதிவில் Computer operating System பற்றி விரிவாக எழுதபட்டுள்ளது.

3. சிலர் என்னிடம் அடிக்கடி புலம்புவது இப்படிதான் இருக்கும். புது கம்ப்யூட்டர் வாங்கி கொஞ்ச நாள் கூட ஆகல.. ரொம்ப ஸ்லோவா இருக்கே சார்.. என்ன செய்யலாம்? என கேட்கின்றனர். அவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். கம்ப்யூட்டரில் நீங்களாகவே செய்ய கூடிய சில விடயங்கள் இருக்கிறது. அவற்றை செய்து முடித்துவிட்டால் கம்ப்யூட்டர் வாங்கிய புதியதில் இயங்கியதை போலவே இயங்கும். அவ்வாறு இயங்க வைக்க உங்க கம்ப்யூட்டர் ஸ்லோவா? எப்படி சரி செய்யலாம்? என்ற இடுகையை வாசிக்கலாம்.

4. இன்று Desktop Computer களை விட Laptop Computer களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதை பராமரித்து அடிக்கடி ரிப்பேர் ஆகாமல் பாதுகாக்க லேப்டாப் கம்ப்யூட்டரை பராமரிப்பது  எப்படி என்ற இந்த இடுகையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ளதை பின்பற்றினால், கட்டாயம் உங்களுடைய லேப்டாப் அடிக்கடி ரிப்பேர் ஆகாது.

5. இன்டர்நெட்டில் உலவும்பொழுது கண்டதை எல்லாம் டவுன்லோட் செய்து வைக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. குறிப்பாக Unlimited Internet connection வைத்திருப்பவர்கள் தயங்காமல் எந்த சாப்ட்வேரை உடனே Download செய்து விடுகின்றனர்.

பரீட்சித்து பார்ப்பதற்காக புதிய மென்பொருட்களை தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, பிறகு அதைப்பற்றிய நினைவே இல்லாமல் மறந்து போய்விடுகின்றனர். இப்படி ஒவ்வொரு முறையும் புதிய புதிய மென்பொருட்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தவோடு, அவற்றை பற்றிய நினைவே இல்லாமல் விட்டுவிடுகின்றனர்.

ஒரு முறை மட்டும் பயன்படக்கூடிய மென்பொருள்களை கூட டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டு, பிறகு அதை அன்இன்ஸ்டால் செய்யாமல் மறந்து விடுகின்றனர். இதனால் ஹார்ட் டிஸ்க் நிரம்பி கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்கும். இதை தவிர்க்க உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டதா? இதோ தீர்வு! என்ற பதிவினை கட்டாயம் வாசிக்கவும்.

6. ஒரு நண்பர் திடீரென நடு இரவில் போன் செய்து என்னுடைய டெஸ்டாப்பில் உள்ள எந்த ஒரு ஐகானையும் காணோம் என்ன செய்வது என கேட்டார். அவருக்கு அளித்த விளக்கத்தையேதிடீரென்ன டெஸ்டாப்பில் ஐகான்கள் மறைந்து விட்டதா? அதற்கான தீர்வு என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்… கட்டாயம் உங்களுக்கு உதவும்.

7. கம்ப்யூட்டர் பாதுகாப்பு மிக மிக அவசியம். இன்டர்நெட் பயன்படுத்தும் நண்பர்கள் கட்டாயம்ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். ஹார்ட் டிஸ்க்கில் ஏதேனும் பிரச்னை என்றால் அதை சரி செய்வதற்கும் மென்பொருள் உண்டு. இதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள Hard Disk பிரச்னையை சரி செய்யும் மென்பொருள் என்ற இடுகையை வாசிக்கவும்.

8. கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கும்பொழுது பின்புலத்தில் உங்களுக்கு தெரியாமலேயே நிறைய இயங்கி கொண்டிருக்கும். அவ்வாறு தேவையில்லாத மென்பொருள்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும்போது Computer -ஐ Shutdown செய்தால் அது ஷட்டவுன் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.