கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் பராமரிப்பது எப்படி

images (29)

கம்ப்யூட்டர் ரிப்பேர் இல்லாமல் அதிக நாள் பயன்படுத்த வேண்டுமானால் முறையானபராமரிப்பு அவசியம். ஒரு சில பராமரிப்புகளை செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் கம்ப்யூட்டரை பழுது ஏற்படாமல் தடுக்கலாம்.

கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பாகங்கள் அதிக வெப்பமடையாமல் ஒரே சீரான வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் ரிப்பேர் ஆகாமல் தடுக்கலாம் சாதாரணமாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும், அதன் உள் பாகங்கள் அதிக வெப்பமடையாமல் இருக்க அதில் சிறிய காற்றாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். அக்காற்றாடிகள் வெளியில் இருக்கும் வெப்ப காற்று கம்ப்யூட்டருக்குள் புகாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும்.

காற்றாடிகள் இருந்தும் கம்ப்யூட்டர் சில சமயங்களில் அதிக வெப்பமடைந்துவிடும். இதற்கு காரணம் அதன் மீது வந்து படியும் தூசிகள்தான்.வெப்பத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள அக்காற்றிகளின் மீது கம்ப்யூட்டர் கேபினில் காற்றோட்ட வசதிக்காக விடப்பட்டிருக்கும் துளைகள் வழியாக தூசிகள் வந்து படிகின்றன.

தொடர்ச்சியாக தூசிகள் கம்ப்யூட்டருக்குள் புகுவதால், சிபியூ கேபின் உள்ளே இருக்கும் மதர்போர்ட் COMPUTER MOTHERBOARD மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள நுட்பமான பாகங்கள்அனைத்தும் தூசிகளால் மூடப்படுகின்றன.  இதனால் அப்பாகங்ககளிலிருந்து வெளிப்படும் வெப்பம் சரிவர வெளியேறாமல் சிபியூ அதிக வெப்பமடைகிறது. சி.பியூவின் இயல்பு வெப்பநிலை 55 டிகிரி. ஐம்பத்தைந்து டிகிரிக்கும் சிபியூ கேபின் உள் வெப்பம் அதிகரிக்கும்போது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிடும்.

சிபியூவின் வெப்ப நிலையை கண்காணிக்கும் மென்பொருள்

CPU -ன் வெப்பநிலையை கண்காணிக்க என ஒரு மென்பொருள் உண்டு. அதன் பெயர் கோர் டெம்ப் (core temp). இந்த மென்பொருளை பயன்படுத்தி சிபியூவின் தற்போதைய வெப்பநிலையை அறிந்துகொள்ள முடியும் இயல்புக்கு மாறாக அதிக வெப்பநிலையில் CPU இருந்தால் கண்டிப்பாக அதில் தூசிகள் அதிகம் அடைத்து கொண்டிருக்கிறது என்று பொருள்.ஒரு சில வகை சி.பி.யூக்கள் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இயங்காத வண்ணம் அதனுடையஜங்சன் (Junction) தெர்மல்கட்டாப்(thermal cutoff)இருக்கும்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க ஹார்ட் டிஸ்க் பராமரிப்பு:

கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் எவ்வளவு வெப்பநிலையில் உள்ளது என்பதை கண்டறிய கிறிஸ்டல் டிஸ்க் இன்பர்மேஷன் (crystaldiskinfo) என்ற பயன்பாடு உதவும். Hard Disk-ன் இயல்பு நிலை வெப்பம் 20 டிகிரி முதல் 55 டிகிர வரை இருக்க வேண்டும். அதற்கு மேலான வெப்பநிலை எனில் கண்டிப்பாக உங்கள் கணினி பாதிப்புக்கு உள்ளாகும்.
சில சமயம் தூசிகள் நாம் இணைக்கும் இணைப்பானில் (ports, Junction, connection)ஆகியவைகளில் படிந்து அதில் இயல்பாக உள்ள இணைப்புகளை மாற்றி அமைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சில வேளைகளில் இதுபோன்ற இணைப்பான்களின் மூலம் இணைப்பை ஏற்படுத்த முடியாமல் தடங்கள் செய்யும்.

தூசிகளினால் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதை தடுக்க? 

லேப்டாப் போன்ற மடி கணினிகளை நல்ல காற்றோட்டமான இடங்களில் வைத்து பயன்படுத்தலாம்.Desktop என்று சொல்லக்கூடிய மேசைக் கணினிகளின் CPU cabin -ஐ கழற்றி, அதில் உள்ள தூசிகளை Air Compressor, வேக்வம் கிளீனர், லிக்வட் ப்ரீ டஸ்ட்டிங் (liquid-free dusting) கொண்டு தூய்மைப்படுத்தலாம்.
இவ்வாறு கம்ப்யூட்டருக்குள் படியும் அழுக்கு மற்றும் தூசிகளை முறையாக அகற்றி பராமரித்தால் கம்ப்யூட்டர் அதிக வெப்பமடைவது தடுக்கப்படும். அதிக வெப்பமடையாதகம்ப்யூட்டர் விரைவில் ரிப்பேர் ஆகாமல் இருக்கும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.