கேரட்டில் என்னென்ன சத்துகள் இருக்கு

download (38)

‘பளிச்’சென்று பார்வையை ஈர்க்கும் கேரட்டில் பல ஆரோக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சில..

* வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் கேரட் ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

* கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், கொழுப்பைக் கரைக்கும் சக்தி கொண்டது.

* தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

* கேரட் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கிறது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

* கேரட் சாற்றுடன், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

* பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

* கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்றுநோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

* கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடும்.

* சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.