உலகின் மிக நீள சுரங்க ரயில் பாதை

download (31)

ஜூரிச்:சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை, சோதனை ஓட்டத்துக்கு தயாராகி உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், 56 கி.மீ., நீளமுள்ள, சுரங்க ரயில் பாதை, 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 1996ல், துவங்கப்பட்ட கட்டுமானப் பணியில், 2,000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஆல்ப்ஸ் மலையின் அடிப்பகுதியில், 8 ஆயிரம் அடி ஆழத்தில், சுரங்கம் தோண்டப்பட்டது. அதில் இருந்து 20 லட்சம் லாரிகளில், இடிபாடுகள் அகற்றப்பட்டன. மிகவும் கடினமான இந்த பணியின்போது, எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.இந்த சுரங்க ரயில் பாதையில், போக்குவரத்து துவங்கப்பட்டால், ஜூரிச்சில் இருந்து மிலன் நகருக்கு மூன்று மணி நேரத்துக்குள் சென்று விடலாம். தற்போது, நான்கு மணி நேரம் ஆகிறது. வரும் ஜூனில், பயன்பாட்டுக்கு வரும் இந்த வழித்தடத்தில், அக்டோபர் முதல், சோதனை ஓட்டங்கள் துவங்குகின்றன.ஜப்பானின், 54 கி.மீ., நீளமுள்ள, சுரங்க ரயில் பாதைதான், உலகின் மிக நீளமான, சுரங்க ரயில் பாதையாக இருந்தது. தற்போது, சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்ட சுரங்க ரயில் பாதை அந்த இடத்தை பிடித்துள்ளது

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.