கேல் ரத்னா விருது பெற்றார் சானியா மிர்சா

சானியா மிர்சா

புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருது பெற்றார். டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார்.

இந்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், தேசிய விளையாட்டு தினத்தில் (ஆக., 29) விருதுகள் வழங்கப்படுகின்றன.இதில் உயரிய விருது ‘கேல் ரத்னா’. 2011 முதல் 2014 (4 ஆண்டுகள்) வரையிலான சர்வதேச போட்டிகளில் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இவ்விருதுக்குரிய நட்சத்திரம் தேர்வு செய்யப்பட்டார்.இதன் படி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து ‘கேல் ரத்னா’ விருது பெற்றார். இவருக்கு ரூ. 7.5 லட்சம் பணம், பதக்கம் மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.