இஞ்சி குழம்பு

images (2)

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு -2 ஸ்பூன்
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சாம்பார் பொடி  -2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்  – 3
புளி         – சிறிதளவு
பூண்டு           – 20 பல்
இஞ்சி       – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம்  – 1 ஸ்பூன்
கடுகு           – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி  – சிறிதளவு
பெருங்காயம்   – சிறிதளவு
கறிவேப்பிலை –  சிறிதளவு
நல்லெண்ணெய்   – 4  ஸ்பூன்
உப்பு     – தேவையான அளவு
புளி     –  சிறிதளவு

செய்முறை

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .  பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில்   நல்லெண்ணைய்  விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.   1   டம்ளர் தண்ணீர்  விடவும்.

புளி  கரைத்த   தண்ணீர்  சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி   எண்ணெய்  பிரிந்து  வரும்போது   இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.