கம்ப்யூட்டரைக் கொல்லும் எபோலா வைரஸ்

உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது.
இதை அவசியம் படியுங்கள். மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது. உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போனில் இது போன்ற செய்தி வந்தாலோ, உடனே, அதனை ஆர்வத்தில் லிங்க்கில் கிளிக் செய்து திறந்து பார்க்காமல், அழித்துவிடுங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.