கின்னஸ் புத்தகம்

download (12)

தமிழ் நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கின்னஸ் கூத்து நடந்தது.அதுதான் 54000 பேர்கள் ரத்ததானம்.இது முதல்வரின் 66 ஆவது பிறந்த நாளுக்கு சாதனை நடத்த நடந்தது.
வண்டி ஓட்ட உரிமம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரில் வந்து உடனே உரிமத்தை வாங்கி செல்லலாம் என்று கடிதம் வர சென்றவர்களிடம் ரத்தம் [கட்டாய ]தானம் பெறப்பட்டது.போக்குவரத்து கழக ஊழியர்கள் கட்டாயம் ரத்தத்தை தர வேண்டப்பட்டார்கள் .அப்போதுதான் ஊதியம் ,இல்லையெனில் எதற்காகவோ மெமோ என்று அன்பாக அறிவுறுத்தப்பட்டார்கள்.இப்படி சிறுக,சிறுக உறிஞ்சப் பட்ட ரத்தப்பைகள் எண்ணிக்கை 54000க்கும் அதிகமாக முதல்வரிடம் [?]கின்னஸ் சான்று வழங்கப்பட்டது.அவரும் ரத்தம் சிந்தாமல் புன்னகை சிந்த வாங்கிக்கொண்டார்.இதில் பெரிய கூத்து இவ்வளவு ரத்தப்பைகள் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லை.ரத்தம் எந்த வகை என்ற ஆய்வோ,அதில் அபாயமான கிருமிகள் ஏதாவது உண்டா என்றும் பார்க்கப்படவில்லை.ரத்தம் கொடுத்தவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் ஊக்க உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை.பலர் தானம் தந்த இடத்திலேயே மயங்கி கிடந்தது வேதனையான விசயம் .அதைவிட வேதனை.ரத்தப் பைகள் தூக்கி கடாசப் பட்டதுதான்.பின்னே எந்த ஆய்வும்-பிரிவும் தெரியாத ரத்தத்தை எந்த நோயாளிக்கு ஏற்ற முடியும்?இதில் பலர் ஊக்கமாக ரத்தம் தர தமிழகஉற்சாகப்பானக்கடைகளுக்கு சென்று வந்துள்ளனர்.சரி.எதற்காக இந்த கின்னஸ் சா [வே]தனை செய்யப்பட்டதோ ?அது என்ன ?கின்னஸ் என்றால் என்ன?

சிறு  வரலாறு

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சர்க்யூபீவர் என்பவர் 1951-ம் ஆண்டு வேட்டையாடுவதற்காக ஒரு நதிக்கரையோரம் சென்றார். அப்போது ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்றன. அவர் உடனே அவைகளை சுட நினைத்து துப்பாக்கியை எடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த பறவைக்கூட்டம் கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு சென்றுவிட்டன.
இதனால் அவர் வியப்பில் உறைந்தார். பறவைகளின் வேகம் குறித்து ஆச்சரியப்பட்டார். அவரை மலைக்க வைத்த பறவை இனம் கோல்டன் பிளவர். இதுபற்றி சர்க்யூபீவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. உலகிலேயே இந்த வகை பறவைகள் தான் வேகமாக பறக்கக் கூடியதா? என்று ஆய்வு செய்தார். இதுபற்றி பலரிடம் கேட்டும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. அப்போதுதான் நாமே ஒரு புத்தகம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவர் லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்கு புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தந்தனர். இந்த மூவரின் உழைப்பில் தான் தற்போதைய ‘கின்னஸ்’ புத்தகம்.


1955-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி சுமார் 198 பக்கங்களுடன் முதல் கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டனர். அதில் உலகிலேயே மிகப் பெரியது, மிகச் சிறியது பற்றிய விவரங்ககள் இருந்தன. இந்த புத்தகம் அந்த ஆண்டு அதிக அளவில் விற்பனையாகி சாதனைப் படைத்தது. 

அப்போது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனைகள், அவற்றை செய்தவர்கள் பற்ரிய தகவல்களுடன் புத்தகம் வெளிவருகிறது. 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் கின்னஸ் புத்தகம் வரவில்லை.நாம் ஒரு சாதனையாளராக இருந்தால் அதையும் கின்னசுக்கு அனுப்பலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிக்கை செய்திகள். பார்வையற்றவர்களாக இருந்தால் அவர்களின் கையெழுத்து தொகுப்பு. 

அவை உண்மையானவைதான் என்பது குறித்து நம்பகத்தன்மைக்கு பொறுப்பான நிறுவன தலைவர் தரும் உறுதிமொழி கடிதம் ஆகியவற்றை சேகரித்து அனுப்ப வேண்டும்.முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளி வந்த கின்னஸ் புத்தகம், தற்போது 35 மொழிகளில் வெளிவருகிறது.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.